World Chess Championship 2023: செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி! முதல் சுற்று டிரா! கால்சனை கதறவிட்ட பிரக்ஞானந்தா!
Aug 22, 2023, 07:44 PM IST
”நாளைய தினம் மாலை 4.30 மணிக்கு கருப்பு நிற காய்களுடன் பிரக்ஞானந்தா விளையாடுவார் நாளைய போட்டியும் ட்ராவில் முடிந்தால் மீண்டும் டை பிரேக்கர் சுற்று ரேபிட் முறையில் நடைபெறும்”
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் முதல் சுற்று டிராவில் முடிந்துள்ளது. பத்தாவது உலகக்கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரில் நடந்து வருகிறது. அரையிருதி போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் 3ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானா காருவானாவை எதிர்கொண்டார்.
3ஆவது ஆட்டத்தில் தனது 63 ஆவது காய் நகர்த்தலில் பேபியனாவை வீழ்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இந்த நிலையில் உலகின் நெம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவருமான மேக்னஸ் கால்சன் உடன் இறுதிப்போட்டியை எதிர்கொண்டார்.
பரபரப்பான இறுதி போட்டியில் பிரக்ஞானந்தாவின் 12 ஆவது நகர்த்தலுக்கு பிறகு அடுத்த நகர்த்தலுக்கு 30 நிமிடம் வரை மேக்னஸ் கால்சன் எடுத்துக் கொண்டார்.
உலகின் நெம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கால்சனுக்கு கடும் நெருக்கடியை பிரக்ஞானந்தா கொடுத்த நிலையில் 35ஆவது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் டிரா செய்ய ஒப்புக் கொண்டதால் உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது.
நாளைய தினம் மாலை 4.30 மணிக்கு கருப்பு நிற காய்களுடன் பிரக்ஞானந்தா விளையாடுவார் நாளைய போட்டியும் ட்ராவில் முடிந்தால் மீண்டும் டை பிரேக்கர் சுற்று ரேபிட் முறையில் நடைபெறும்
டாபிக்ஸ்