தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wimbledon 2023: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளின் லிஸ்ட் இதோ

Wimbledon 2023: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளின் லிஸ்ட் இதோ

Manigandan K T HT Tamil

Jun 26, 2023, 03:09 PM IST

google News
Grandslam Tennis: இகா ஸ்வியாடெக் உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 இடத்திலும், சபலென்கா நம்பர் 2 இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (hindustantimes)
Grandslam Tennis: இகா ஸ்வியாடெக் உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 இடத்திலும், சபலென்கா நம்பர் 2 இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Grandslam Tennis: இகா ஸ்வியாடெக் உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 இடத்திலும், சபலென்கா நம்பர் 2 இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் போட்டி வருகிற ஜூலை 3ம் தேதி தொடங்கி அம்மாதம் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஆண்டுதோறும் இப்போட்டி இங்கிலாந்தில் நடைபெறும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படும் முன்னணி வீரர்கள், வீராங்கனைகளின் பட்டியலைப் பார்ப்போம்.

கடந்த ஆண்டு யுஎஸ் ஓபனிலும், இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனிலும் சாம்பியன் பட்டம் வென்ற போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஆஸ்திரேலியின் ஓபனில் இம்முறை சாம்பியன் ஆன பெலாரஸ் வீராங்கனை சபலென்கா உள்ளிட்டோர் இப்போட்டியில் டாப் போட்டித் தரவரிசையில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.

இகா ஸ்வியாடெக் உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 இடத்திலும், சபலென்கா நம்பர் 2 இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 - இகா ஸ்வியாடெக் (போலந்து)

2 - ஆரினா சபலென்கா (பெலாரஸ்)

3 - எலினா ரைபகினா (கஜகஸ்தான்)

4 - ஜெசிகா பெகுலா (அமெரிக்கா)

5 - கரோலின் கார்சியா (பிரான்ஸ்)

6 - ஓன்ஸ் ஜாபர் (துனிசியா)

7 - கோகோ காஃப் (அமெரிக்கா)

8 - மரியா சக்காரி (கிரீஸ்)

9 - பெட்ரா கிவிட்டோவா (செக் குடியரசு)

10 - பார்போரா கிரெஜ்சிகோவா (செக் குடியரசு)

ஆடவர் பிரிவில் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற செர்பியா வீரர் ஜோகோவிச், ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் அல்காரஸ், நார்வே வீரர் காஸ்பர் ருட் உள்ளிட்டோர் டாப் போட்டித் தரவரிசையில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

1 - கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்)

2 - நோவக் ஜோகோவிச் (செர்பியா)

3 - டேனில் மெத்வதேவ் (ரஷ்யா)

4 - காஸ்பர் ரூட் (நார்வே)

5 - ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்)

6 - ஹோல்கர் ரூனே (டென்மார்க்)

7 - ஆண்ட்ரே ரூப்லேவ் (ரஷ்யா)

8 - ஜானிக் சின்னர் (இத்தாலி)

9 - டெய்லர் ஃபிரிட்ஸ் (அமெரிக்கா)

10 - பிரான்சிஸ் தியாபோ (அமெரிக்கா)

டாபிக்ஸ்

அடுத்த செய்தி