Rafael Nadal becomes father: ஆண் குழந்தைக்கு தந்தையானார் நடால்!
Oct 11, 2022, 05:20 PM IST
கிராண்ட் ஸ்லாம் பட்டங்களின் மன்னனாக திகழும் ரஃபேல் நடால் - மரியா பிரான்சிஸ்கா பெரெல்லோ தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டிலுள்ள மல்லோர்கா தீவு அமைந்திருக்கும் மருத்துவமனையில் வைத்து நடால் - மரியா பிரான்சிஸ்கா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றி தகவல்களை ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனை ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் உறுதிபடுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் தனது மனைவி கர்ப்பாக இருப்பதை உறுதிபடுத்தினர் நடால். இதைத்தொடர்ந்து தற்போது ஆண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார்.
டென்னிஸ் விளையாட்டில் 22 முறை கிராண்ட் ஸ்லாம் பதக்கங்களை வென்று, பதக்க மன்னனாக வலம் வருகிறார் 36 வயதாகும் நடால். பல ஆண்டுகள் டேட்டிங்குக்கு பிறகு கடந்த அக்டோபர் 2019இல் மரியா பெரெல்லோவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெற்று முடிந்தது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தனது நண்பரும், சக போட்டியாளருமான ரோஜர் பெடரரின் பிரியாவிடை நிகழ்வில் பங்கேற்று, அவருக்காக கண்ணீர் சிந்தி ரசிகர்களின் மனதில் குடிபுகுந்தார் நடால். இதையடுத்து தற்போது அப்பாவாக மாறியிருக்கும் செய்தி மூலம் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.