Wimbledon Tennis: விம்பிள்டன் டென்னிஸில் முதல் முறையாக காலிறுதிக்கு நுழைந்த ரஷ்ய வீரர்
Jul 11, 2023, 06:19 PM IST
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெக்காவை எதிர்கொண்டார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டானில் மெத்வதேவ் முதல் முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெக்காவை எதிர்கொண்டார்.
6-4 என்ற கணக்கில் முதல் செட்டை மெத்வதேவ் கைப்பற்றினார்.
அடுத்த செட் ஆட்டத்தில் 6-2 என்ற கணக்கில் அவர் இருந்தபோது காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, மெத்வதேவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த போட்டியில் 33 தவறுகளை செய்த செக் குடியரசு வீரர், இரண்டாவது செட் முழுவதும் போராடினார்.
27 வயதான மெத்வதேவ் அளித்த பேட்டியில், "விம்பிள்டனில் நான்காவது சுற்றில் காயமடைவது மிகவும் மோசமானது என்பதால் ஜிரிக்காக நான் வருந்துகிறேன்" என்றார்.
முன்னாள் உலகின் நம்பர் ஒன் வீரரான மெத்வதேவ், 2021 ஆம் ஆண்டில் யுஎஸ் ஓபனை வென்றுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்ய போட்டியாளர்கள் மீதான தடை காரணமாக அவர் கடந்த ஆண்டு விம்பிள்டனில் விளையாடவில்லை.
மெத்வதேவ் மாஸ்கோவில் செர்ஜி மெத்வதேவ் மற்றும் ஓல்கா மெத்வதேவா ஆகியோருக்கு பிறந்தார். மெத்வதேவுக்கு ஜூலியா மற்றும் எலினா என்ற இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர், அவர்கள் முறையே 12 மற்றும் 8 ஆண்டுகள் மூத்தவர்கள்.
2015 கிரெம்ளின் கோப்பையின் ஒற்றையர் பிரிவில் மெத்வதேவ் ஏடிபி டூர் மெயின் டிராவில் அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டில், விம்பிள்டனில் முதல் முறையாக ஒரு மேஜர் போட்டியில் பங்கேற்றார், அங்கு அவர் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஸ்டான் வாவ்ரிங்காவை தோற்கடித்தார்.
மெத்வதேவ் ஜூலை 2009 இல் தனது 13 வயதில் எஸ்டோனியாவில் தனது முதல் ஜூனியர் போட்டியில் விளையாடினார். டிசம்பர் 2010 இல், அவர் தனது மூன்றாவது போட்டியில் தகுதிச் சுற்றில் தனது முதல் ஜூனியர் பட்டத்தை வென்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்