தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Wi: அறிமுக வீரர்கள் மூன்று பேர் கலக்கல் - டெஸ்ட் கிரிக்கெட்டில் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த இந்திய அணி

IND vs WI: அறிமுக வீரர்கள் மூன்று பேர் கலக்கல் - டெஸ்ட் கிரிக்கெட்டில் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த இந்திய அணி

Jul 25, 2023, 07:19 AM IST

google News
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் 22 ஆண்டுகள் கால சாதனையை முறியடித்துள்ளது. (AP)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் 22 ஆண்டுகள் கால சாதனையை முறியடித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் 22 ஆண்டுகள் கால சாதனையை முறியடித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை காரணமாக இந்த போட்டி டிரா ஆனது. இருப்பினும் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியின் முதல் டெஸ்ட் தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த தொடரில் அறிமுக வீரர்களாக யஷஸ்வி ஜெய்வால், இஷான் கிஷன், முகேஷ் குமார் என மூன்ற வீரர்கள் இந்திய அணியில் களமிறங்கினர். இவர்கள் மூவரும் அணிக்கு தேவையான பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இரண்டு போட்டிகள் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு சதம், இரண்டு அரைசதம் உள்பட 266 ரன்கள் குவித்து இந்த தொடரின் டாப் ரன் ஸ்கோரராக உள்ளார். இஷான் கிஷன்,  ஒரு அதிவேக அரை சதம் அடித்ததுடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி 78 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் விக்கெட் கீப்பரான அவர் 5 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.

முகேஷ் குமார் ஒரு போட்டியில் விளையாடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இந்த தொடரில் இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வந்த 22 ஆண்டு கால சாதனையை முறியிடித்துள்ளது. அதன்படி இரண்டாவது டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது  இந்திய அணி. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிவேக சதமடித்த அணி என்ற சாதனையை புரிந்துள்ளது.

இதற்கு முன்னர், கடந்த 2001ஆம் ஆண்டில் இலங்கை அணி 13.2 ஓவரில் வங்கதேசம் அணிக்கு எதிராக 100 ரன்களை கடந்தது தான் அதிவேக சதமடித்த ஸ்கோராக இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து 22 ஆண்டுகள் கழித்து இந்த சாதனையை முறியடித்துள்ளது இந்திய அணி.

இந்த போட்டியில் கடைசி நாள் முழுவதும் மழை பெய்த நிலையில் போட்டி டிரா ஆனது. மழை மட்டும்  பெய்யாமல் இருந்தால் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தன.

முன்னனி வீரர்களான அஜிங்கியா ரஹானா, சுப்மன் கில் ஆகியோர் பேட்டிங்கிலும், பவுலர்களில் ஜெயதேவ் உனத்கட், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் எதிர்பார்த்த அளவிலான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் ஏமாற்றினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி ஜூலை 27ஆம் தேதி தொடங்குகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி