தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Nz Vs Pak T20 Semi Final: பாகிஸ்தான் ஆதிக்கம் நியூசிலாந்துக்கு எதிராக தொடருமா?

Nz vs Pak T20 semi final: பாகிஸ்தான் ஆதிக்கம் நியூசிலாந்துக்கு எதிராக தொடருமா?

Nov 09, 2022, 01:09 PM IST

google News
இதுவரை நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஐசிசி தொடர்களின் நாக்அவுட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கைகளே ஓங்கியுள்ளது. அத்துடன் இம்முறை கடைசி வாய்ப்பை பயன்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்ற பாகிஸ்தான் அணியின் திடீர் விஸ்வரூபம் எதிரணிக்கு அச்சுறுத்தலை தரும் என நம்பலாம்.
இதுவரை நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஐசிசி தொடர்களின் நாக்அவுட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கைகளே ஓங்கியுள்ளது. அத்துடன் இம்முறை கடைசி வாய்ப்பை பயன்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்ற பாகிஸ்தான் அணியின் திடீர் விஸ்வரூபம் எதிரணிக்கு அச்சுறுத்தலை தரும் என நம்பலாம்.

இதுவரை நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஐசிசி தொடர்களின் நாக்அவுட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கைகளே ஓங்கியுள்ளது. அத்துடன் இம்முறை கடைசி வாய்ப்பை பயன்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்ற பாகிஸ்தான் அணியின் திடீர் விஸ்வரூபம் எதிரணிக்கு அச்சுறுத்தலை தரும் என நம்பலாம்.

குரூப் 1 பிரிவில் இடம்பெற்ற நியூசிலாந்து அணி, முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை இமாலய இலக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி முற்றிலுமாக கைவிடப்பட, மூன்றாவது போட்டியில் இலங்கையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலேயே இருந்து வந்த நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவினாலும், நெட் ரன்ரேட்டை நல்ல நிலையில் வைத்திருந்தது.

இருப்பினும் அந்தப் பிரிவில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் தகுதி பெறுவதற்கான சூழல் இருந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான முக்கியமான போட்டியில் வெற்றி பெற்ற முதல் அணியான அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்த இருஅணிகளும் இதுவரை ஐசிசி நாக்அவுட் தொடரில் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பாகிஸ்தான் 3 முறையும், நியூசிலாந்து 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

முதல் முறையாக 1992இல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தானி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்பின்னர் 1999 உலகக் கோப்பை தொடரில் மான்சஸ்டரில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் மோதின. இந்தப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

தொடர்ச்சியாக இரண்டு முறை பாகிஸ்தான் அணியால் நாக்அவுட் செய்யப்பட்ட நியூசிலாந்து மூன்றாவது முறையாக வெற்றியை ருசித்தது.

கென்யா நாட்டிலுள்ள நைரோபியில் நடைபெற்ற ஐசிசி நாக்அவுட் தொடரில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.

இதற்கு அடுத்தபடியாக முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டவுனில் நடைபெற்ற ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது.

கடைசியாக 2009இல் தென்ஆப்பரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாச்சத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஐந்து ஆட்டங்களிலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இன்று நடைபெறும் அரையிறுதி போட்டி சிட்னியில் நடைபெறுகிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் 6 போட்டிகள் சிட்னியில் நடைபெற்றுள்ளன. இதில் 5இல் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. நியூசிலாந்து 2, பாகிஸ்தான் ஒரு முறை சிட்னி மைதானத்தில் நடப்ப தொடரில் விளையாடி இருப்பதோடு இரு அணிகளும் வெற்றியை பெற்றுள்ளன.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை ஓபனிங் பேட்டிங், பெளலிங், பீல்டிங் பலமாகவே இருந்து வந்துள்ளது. மிடில் ஆர்டரை பொறுத்தவரை பெரிதாக செல்லிக்கொள்ளும் விதமாக பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இதற்கு நேர் எதிராக பாகிஸ்தான் அணியில் ஓபனிங் மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமான பார்மில் இருந்து வரும் நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அணியை கரை சேர்த்து வந்துள்ளனர். பெளலிங்கில் சிறப்பாக செயல்பாட்டாலும் பீல்டிங்கில் சில ரன்களை கோட்டை விடுகின்றன.

இருப்பினும் அவர்களே எதிர்பாராத நிலையில் கடைசியாக கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு அரையிறுதிக்கு நுழைந்திருப்பதால் திடீர் கம்பேக் மூலம் எதிரணிக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.

பரபரப்பு மிகுந்த இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், 2007க்கு பிறகு மீண்டும் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடலாம். அதே சமயம் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை பெறுவதற்கான வாய்ப்பை பெறும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி