தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sunil Chhetri: கால்பந்து விளையாட்டின் தோனியாக மாறிய சுனில் சேத்ரி! தங்க காலனி, தங்க பந்து விருதையும் வென்று சாதனை

Sunil Chhetri: கால்பந்து விளையாட்டின் தோனியாக மாறிய சுனில் சேத்ரி! தங்க காலனி, தங்க பந்து விருதையும் வென்று சாதனை

Jul 06, 2023, 04:11 PM IST

google News
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தங்க காலனி, தங்க பந்து ஆகிய விருதுகளை தட்டி சென்ற இந்திய அணி கேப்னும் நட்சத்திர வீரருமான சுனில் சேத்ரி, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் புரிந்தார். (PTI)
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தங்க காலனி, தங்க பந்து ஆகிய விருதுகளை தட்டி சென்ற இந்திய அணி கேப்னும் நட்சத்திர வீரருமான சுனில் சேத்ரி, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் புரிந்தார்.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தங்க காலனி, தங்க பந்து ஆகிய விருதுகளை தட்டி சென்ற இந்திய அணி கேப்னும் நட்சத்திர வீரருமான சுனில் சேத்ரி, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் புரிந்தார்.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் குவைத் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதையடுத்து சாம்பியன் கோப்பையை பெற்ற இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி, அணி வீரர்களிடம் ஒப்படைத்து அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை ரசித்து பார்த்தார்.

கிரிக்கெட் வீரர் தோனி எந்த கோப்பை வென்றாலும் அதை வீரர்களுடன் கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை அனைவரும் அறிந்ததே. அணி வீரர்களை பெருமைபடுத்தும் விதமாக அதேபோன்ற செயலை தற்போது சுனில் சேத்ரியும் செய்துள்ளார்.

இதையடுத்து தொடரில் அதிக கோல் அடித்த சுனில் சேத்ரி தங்க காலனி விருது வழங்கப்பட்டது. அத்துடன், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்ததற்காக தொடர் நாயகனுக்கு வழங்கப்படும் தங்க பந்து விருதையும் சுனில் சேத்ரியே வென்றார்.

இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கினார்.பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.மேலும் இந்த தொடரில் அதிக கோல் அடித்தவர் வரிசையில் அவரே 5 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

தொடரில் அதிக கோல் அடித்தவருக்கு வழங்கப்படும் தங்க ஷூ விருதையும் அவரே வென்று உள்ளார். மேலும் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டதால் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன்படி தொடர் நாயகனுக்கு வழங்கப்படும் தங்க பந்து விருதும் அவருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையும் சுனில் சேத்ரி படைத்துள்ளார். இதற்கு முன்னர் மாலத்தீவு அணியை சேர்ந்த அலி அஷ்பாக் 23 கோல்கள் அடித்து முதல் இடத்தில் இருந்தார். பத்து ஆண்டுகளாக அவர் இந்த சாதனையை தன் வசம் வைத்திருந்தார். இதையடுத்து இந்த தொடர் தொடங்குவதற்கு முன் சுனில் சேத்ரியும் 23 கோல்கள் அடித்து அவரது சாதனையை சமன் செய்திருந்த நிலையில், தற்போது அதை முறியடித்துள்ளார்.

இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்த கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த கோல் கீப்பர்களுக்கு வழங்கப்படும் தங்க க்ளவ் வங்கதேச அணி கோல் கீப்பர் அனிசுர் ரஹ்மான் ஜிகோ பெற்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி