PAK vs SL 1st Test: இலங்கையில் இரட்டை சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் பிளேயர்!
Jul 18, 2023, 05:55 PM IST
இன்று மாலை 5 மணி நிலவரப்படி பாகிஸ்தான் அணி 112 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 435 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான்-இலங்கை இடையே முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி 161 ரன்களை எடுத்துள்ளது.
ஜூலை 16ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் விளையாடிய இலங்கை அணி 95.2 ஓவர்களில் 312 ரன்களை விளாசியது. அந்த அணியின் தனஞ்செய டி சில்வா 122 ரன்கள் விளாசினார். மாத்யூஸ் 64 ரன்கள் அடித்தார்.
இவ்வாறாக அந்த அணி 312 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அஃப்ரிடி, நஸீம் ஷா, அப்ரர் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய விளையாடி வரும் பாகிஸ்தான் அணி இலங்கையைவிட 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீல் சதம் விளாசினார். இது அவருக்கு 2வது டெஸ்ட் சதம் ஆகும்.
முன்னதாக, ஷகீல் அரை சதம் விளாசியபோது தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் அரை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இடது கை பேட்ஸ்மேனான இவர், இந்தச் சாதனையை நிகழ்த்திய 5 வது வீரர் ஆவார்.
இதற்கு முன் சுனில் கவாஸ்கர், பாசில் பட்சர், சயீத் அகமது, பெர்ட் சட்கிளிஃப் ஆகியோர் இச்சாதனையை நிகழ்த்தியிருக்கின்றனர்.
அடுத்த டெஸ்ட் ஆட்டத்தில் அவர் அரை சதம் அல்லது அதற்கு மேல் ஸ்கோர் எடுத்தால் புதிய உலக சாதனையைப் படைப்பார்.
இதற்கிடையே, ஆட்ட நேர முடிவில் இரட்டை சதம் விளாசினார் ஷகீல். அவர் இலங்கையில் இரட்டை சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் ஆவார். 361 பந்துகளில் 208 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதுவே அவருக்கு அயல்நாட்டு மண்ணில் முதல் சதம் ஆகும். இதற்கு முன்பு சொந்தமண்ணில் மட்டுமே சதம் விளாசியிருக்கிறார்.
கேப்டன் பாபர் அஸாம் 13 ரன்களில் அவுட்டானார். விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அகமது 17 ரன்களிலும், இமாம்-உல்-ஹக் 1 ரன்னிலும் நடையைக் கட்டினர்.
அகா சல்மான் 83 ரன்கள் எடுத்து மென்டிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
டாபிக்ஸ்