World Cup Qualifiers Final: நெதர்லாந்தை ஊதித் தள்ளி சாம்பியன் ஆனது இலங்கை!
Jul 09, 2023, 07:42 PM IST
இந்த வெற்றி இலங்கைக்கு மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என கூறலாம்.
கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி முதல் ஜூலை 9ம் தேதி வரை நடந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை குவாலிஃபையர் பைனலில் இலங்கை வெற்றி பெற்றது.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2 அணிகளை தேர்வு செய்ய தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடந்தன.
இந்தப் போட்டியில் நெதர்லாந்து, இலங்கை ஆகிய அணிகள் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றன.
இன்று உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் நடந்தது. அந்த ஆட்டத்தில் நெதர்லாந்தும், இலங்கையும் மோதின.
நெதர்லாந்து அணி டாஸ் ஜெயித்து பவுலிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இலங்கை, 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களை எடுத்தது.
234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து 23.3 ஓவர்களில் 105 ரன்களில் சுருண்டது. தீக்ஷனா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும், மதுஷனகா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றி இலங்கைக்கு மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என கூறலாம்.
முன்னதாக, ஐரோப்பிய நாடான நெதர்லாந்து முதன் முதலில் 1996இல் நடைபெற்ற உலக கோப்பை ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதைத்தொடர்ந்து 2003, 2007, 2011 ஆகிய மூன்று உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்ற அந்த அணி, தற்போது 12 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் தகுதி பெற்றுள்ளது.
வரும் அக்டோபர் - நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடரில் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி விளையாடவுள்ளது. இந்த அணி உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறு முக்கிய பங்கு ஆற்றிய வீரராக ஆல்ரவுண்டர் பாஸ் டீ லீட் உள்ளார்.
ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற நிலையில், அந்த போட்டியில் 52 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 92 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார் பாஸ் டீ லீட். இதன் மூலம் ஒரே போட்டியில் 5 விக்கெட் மற்றும் 100 ரன்கள் எடுத்த ஐந்தாவது வீரர் என்ற அரிய சாதனை புரிந்தார்.
டாபிக்ஸ்