Foot Ball: ஸ்பெயின் முத்த சர்ச்சை; 81 கால்பந்து வீரர்கள் சங்கத் தலைவருக்கு எதிராக ஸ்டிரைக் செய்யத் தயார்
Aug 26, 2023, 05:13 PM IST
ஸ்பெயின் கால்பந்து சங்கத்தலைவரின் முத்த சர்ச்சைக்கு, எதிராக 81 கால்பந்துவீரர்கள் ஸ்டிரைக் செய்யத்தயார் நிலையில் உள்ளனர்.
சிட்னி: அண்மையில் உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து தொடரானது, ஆகஸ்ட் 20, 2023 சிட்னியில் நடந்தது. இப்போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி, முதல் முறையாக உலகக்கோப்பையினை வென்றது. அதனைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் ஸ்பெயின் கால் பந்து சங்கத்தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் சில வீராங்கனைகளை ஆரத்தழுவி பாராட்டினார்.
மேலும், ஸ்பெயினின் முன்கள வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசாவை கட்டிப்பிடித்து, உதட்டில் லிப்லாக் செய்தார். இதில் சற்று கடுப்பான அந்த வீராங்கனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த அத்துமீறலான முத்தம் தனக்குப் பிடிக்கவில்லை எனப் பதிவிட்டார். இது கடும் சர்ச்சையினைக் கிளப்பியது. ஸ்பெயின் நாட்டு மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
ஸ்பெயின் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்னிப்புக்கேட்கவேண்டும் என முழங்கினார். பலரும் ஸ்பெயின் கால்பந்து சங்கத்தலைவர் லூயிஸ் ருபியாலெஸ்ஸை திட்டித்தீர்த்தார்கள்.
அதன்பின் இந்த முத்த சர்ச்சையில் பாதிக்கப்பட்ட ஹெர்மோசா சார்பில், ஸ்பெயின் கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில், 'இது திடீரென்று நடந்த விசயம். எனக்கும் எங்கள் கால்பந்து சங்கத்தலைவருக்கும் நல்ல உறவு இருக்கிறது' என இருந்தது.
இந்நிலையில் முத்த விவகாரத்தால், ருபியாலெஸ் பகிரங்க மன்னிப்பினைக் கோரினார். இவ்விவகாரத்துக்குப்பின் வாய் திறந்த அவர், ‘ஹெர்மோசாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். உற்சாகமிகுதியால் அவ்வாறு நடந்து கொண்டேன். இது தனக்கு ஒரு பாடம்' என்றார்.
சம்பவத்திற்கு லூயிஸ் ருபியாலெஸ்ஸை மன்னிப்புக்கேட்டபோதிலும், பதவி விலகமாட்டேன் என நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் ஸ்பெயின் கால்பந்து சங்கத்தலைவர் லூயிஸ் ருபியாலெஸ், பதவி விலகும் வரை விளையாடமாட்டோம் என ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணியினர் அதிரடியாக அறிவித்துள்ளனர். மொத்தமாக 81 கால்பந்து வீரர்கள் ஸ்பெயின் கால்பந்து சங்கத்தலைவர் லூயிஸ்-க்கு எதிராக ஸ்டிரைக் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக ஸ்பெயின் அரசு, ருபியாலெஸ்ஸை பணியிடை நீக்கம் செய்ய முயன்று வருவதாகத் தெரிகிறது. அதேபோல், கால்பந்துக்கான ஃபிபா கூட்டமைப்பும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.
இவ்விவகாரம் தொடர்பாக, பெரும்பாலான திறமையான கால்பந்து வீரர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்குத் தயார் நிலையில் உள்ளனர். அரசியல்வாதிகளும் மற்ற தலைவர்களும் ருபியாலெஸ்ஸை விமர்சித்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்