Yashasvi Jaiswal: ‘இந்தியாவின் எதிர்காலம் அவன் தான்..’ ஜெய்ஸ்வாலை புகழ்ந்த ஏபி டி வில்லியர்ஸ்!
Jul 20, 2023, 09:32 AM IST
AB de Villiers: ‘வேகம் அவரைத் தொந்தரவு செய்யப் போவதில்லை. வேகம் மற்றும் சுழலுக்கு எதிராக முடிவெடுப்பதற்கும் விளையாடுவதற்கும் அவருக்கு நேரம் கிடைத்துள்ளது’
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே கரீபியனில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை நாம் அனைவருமு் அறிவோம்.
ஜெய்வாலின் சிறப்பான ஆட்டம் குறித்து தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற பேட்ஸ்மேனான ஏபி டி வில்லியர்ஸ், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலைப் பாராட்டி புகழ்ந்துள்ளார். இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச ஆட்டத்தை விளையாடிய, இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஒரு அற்புதமான சதத்துடன் தனது முத்திரையை பதிவு செய்திருந்தார். டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பூங்காவில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக ரோஹித் சர்மா மற்றும் அணியினர் சிறப்பாக விளையாடினர்.
இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்வால், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தனது முதல் டெஸ்டில் கேப்டன் ரோஹித்துடன் இணைந்து ஒரு சாதனையை முறியடித்தார். தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவுக்காக அதிக ஸ்கோரை அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது வருகையை ஜெய்ஸ்வால் அறிவித்தார்.
மேலும் பல கிரிக்கெட் நட்சத்திரங்களின் பாராட்டு மழையிலும் நணைந்து வருகிறார் ஜெய்ஸ்வால். அவரது ஆட்டம் குறித்து ஏ பி டிவில்லியர்ஸ் கூறுகையில், ‘‘ இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்‘‘ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘அவரிடம் ஏதோ சிறப்பு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. தனித்து நின்ற வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். வரிசையில் முதலிடத்தில், தனது முதல் டெஸ்டில், ஒரு இளைஞர் தனது முதல் டெஸ்டில் விளையாடி சதம் அடிப்பது ஒவ்வொரு நாளும் நடக்காது. அவர் ஐபிஎல்லில் விளையாடுவதை முதன்முதலில் பார்த்தபோது, அவரிடம் ஏதோ ஒரு சிறப்பு இருப்பதாக எனக்குத் தெரியும். நீங்கள் அவரைப் பார்க்கும் போது, அவர் பந்தை எதிர்கொள்ள எவ்வளவு நேரம் எடுக்கிறார் என்பதை நீங்கள் உணரலாம், ”என்று டிவில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
தனது முதல் ஆட்டத்தில் தனது திறமையை நிரூபித்த ஜெய்ஸ்வால் 387 பந்துகளில் 171 ரன்கள் எடுத்து டொமினிகாவில் பல சாதனைகளை முறியடித்தார். அறிமுக டெஸ்டில் சதம் அடித்த இந்தியாவின் 17வது பேட்ஸ்மேன் ஆனார். தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் டெஸ்ட் அறிமுகத்திலேயே அதிக பந்துகளை சந்தித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 21 வயதான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் 150 ரன்கள் எடுத்த ஐந்தாவது இளம் வீரர் ஆவார்.
ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரின் சதங்களால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது. இளம் ஜெய்ஸ்வால் தனது மாஸ்டர் கிளாஸ் பேட்டிங்கிற்காக ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
‘‘அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது. அவர் ஒரு நல்ல, உயரமான இடது கை வீரர். வேகம் அவரைத் தொந்தரவு செய்யப் போவதில்லை. வேகம் மற்றும் சுழலுக்கு எதிராக முடிவெடுப்பதற்கும் விளையாடுவதற்கும் அவருக்கு நேரம் கிடைத்துள்ளது. அவர் மிகவும் திறமையான இளைஞர். இந்திய அணியின் எதிர்காலத்திற்கான மிகவும் சூடான வாய்ப்பு அவருக்கு உண்டு. அந்த போட்டியில் அவர் அந்த சதத்தை அடித்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று டிவில்லியர்ஸ் மேலும் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்