தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special: புயல் வேக பீல்டர்! தென்ஆப்பரிக்கா அணிக்காக ஹாக்கி, கிரிக்கெட் விளையாடிய வீரர்

HT Sports Special: புயல் வேக பீல்டர்! தென்ஆப்பரிக்கா அணிக்காக ஹாக்கி, கிரிக்கெட் விளையாடிய வீரர்

Jul 27, 2023, 06:15 AM IST

google News
மாயி படத்தில் பெண் பார்க்கும் போது மாப்பிள்ளை மொக்கசாமியாக வரும் வடிவேலுக்கு ஏற்படும் நிலைமைதான் இவர் பீல்டிங் திசையில் பந்தை அடிக்கும் பேட்ஸ்மேன்களுக்கு. பந்தை அடித்த மறுகணமே புயல் வேகத்தில் மடக்கி பிடித்து ஷாக் கொடுக்கும் வீரராக இருந்து வந்தவர் தென்ஆப்பரிக்கா முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ்.
மாயி படத்தில் பெண் பார்க்கும் போது மாப்பிள்ளை மொக்கசாமியாக வரும் வடிவேலுக்கு ஏற்படும் நிலைமைதான் இவர் பீல்டிங் திசையில் பந்தை அடிக்கும் பேட்ஸ்மேன்களுக்கு. பந்தை அடித்த மறுகணமே புயல் வேகத்தில் மடக்கி பிடித்து ஷாக் கொடுக்கும் வீரராக இருந்து வந்தவர் தென்ஆப்பரிக்கா முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ்.

மாயி படத்தில் பெண் பார்க்கும் போது மாப்பிள்ளை மொக்கசாமியாக வரும் வடிவேலுக்கு ஏற்படும் நிலைமைதான் இவர் பீல்டிங் திசையில் பந்தை அடிக்கும் பேட்ஸ்மேன்களுக்கு. பந்தை அடித்த மறுகணமே புயல் வேகத்தில் மடக்கி பிடித்து ஷாக் கொடுக்கும் வீரராக இருந்து வந்தவர் தென்ஆப்பரிக்கா முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ்.

தென்ஆப்பரிக்கா அணிக்காக டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர் ஜான்டி ரோட்ஸ். 1992 முதல் 2003 வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய இவர், 1999ஆம் ஆண்டில் அயர்லாந்து அணிக்காக சில போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

புயல் வேகத்தில் பீல்டிங் செய்வதில் பெயர் பெற்ற ரோட்ஸ் தென்ஆப்பரிக்கா அணிக்காக 100 கேட்ச்கள் பிடித்த முதல் வீரர் என்ற சாதனையை புரிந்தவராக உள்ளார். 1998ஆம் ஆண்டில் தென்ஆப்பரிக்கா அணி வென்ற ஒரே ஐசிசி கோப்பை தொடரான, ஐசிசி நாக்அவுட் டிராபி வெற்றி பெற்ற அணியில் இடம்பிடித்த வீரராக ரோட்ஸ் இருந்துள்ளார்.

பீல்டிங்கில் பேக்வேர்டு பாயிண்ட் பொஷிசனில் நிற்கும் ரோட்ஸ் தனது திசையில் வரும் பந்தை தடுப்பதிலும் சரி, கேட்ச்மாக மாற்றி லாவகமாக பிடிப்பதிலும் சரி வல்லவராக இருந்துள்ளார். 1999 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் அதிக ரன் அவுட்களை செய்த வீராராக இருந்துள்ளார் ரோட்ஸ்.

1992ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் அறிமுகமான ஜான்ட் ரோட்ஸ், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இன்சாமாம் உல் ஹக் பயிண்ட் திசையில் செல்லமாக தட்டிவிட்டு ரன் ஓட முயற்சித்தபோது, விர்ரென் ஓடிவந்து பறவை போல் பறந்து மூன்று ஸ்டாம்ப்களையும் தட்டிவிட்டு ரன் அவுட்டாக்கினார். கிரிக்கெட் விளையாட்டில் அதுவொரு கண்கொள்ளாத காட்சியாக இருப்பதோடு, சிறந்த ரன்அவுட்டாகவும் இன்று வரையிலும் இருந்து வருகிறது.

1993ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 கேட்ச்களை பிடித்தார் ரோட்ஸ். விக்கெட் கீப்பர் தவிர பீல்டர் ஒருவர் 5 கேட்ச்கள் ஒரே போட்டியில் பிடித்தது உலக சாதனையாக அமைந்தது.

பீல்டிங் இப்படி என்றால் பேட்டிங்கிலும் மீடில் ஆர்டர், லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கி விரைவாக ரன்களை சேர்ப்பதுடன், அணிக்கு நல்ல பினிஷராகவும் இருந்துள்ளார். இவரது பேவரிட் ஷாட்டாக ரிவர்ஸ் ஸ்வீப் இருந்து வரும் நிலையில், முதல் முறையாக இவர் அடித்த ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸராக மாறியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் குறிப்பிடத்தகுந்த விதமாக ஆட்டத்தை பீல்டிங்கிலும், பேட்டிங்கிலும் வெளிப்படுத்தியுள்ளார் ஜான்டி ரோட்ஸ். 2000ஆவது ஆண்டிலேயே இலங்கை சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ரோட்ஸ்.

2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின் ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருந்தார் ரோட்ஸ். ஆனால் அந்த தொடரில் கென்யாவுக்கு எதிரான போட்டியில் கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது கைவிரலில் காயம் ஏற்பட்டது பாதியிலிருந்து விலகினார். அப்படியே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடையும் பெற்றார்.

ஜான்டி ரோட்ஸ் கிரிக்கெட் விளையாட்டு மட்டுமில்லாமல், தென் ஆப்பரிக்கா அணிக்காக ஹாக்கி போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 1992ஆம ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தகுதி சுற்று போட்டிகளில் பங்கேற்றார். அதேபோல் 1996ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார்.

ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டுளார். 2013ஆம் ஆண்டில் தென்ஆப்பரிக்கா டூரிசத்தால் இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்ட ரோட்ஸ், இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு மீது கொண்டு பற்று காரணமாக தனது மகளுக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளார்.

அற்புதமான பீல்டிங், அசத்தலான பேட்டிங் என இரண்டிலும் திணறடித்த வீரரான ஜாண்டி ரோட்ஸ் இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி