தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  India Playing Xi: டெஸ்டில் அறிமுகம்.. பிளேயிங் லெவனில் இடம்பிடித்த யஷஸ்வி, இஷான் கிஷன்!

India Playing XI: டெஸ்டில் அறிமுகம்.. பிளேயிங் லெவனில் இடம்பிடித்த யஷஸ்வி, இஷான் கிஷன்!

Manigandan K T HT Tamil

Jul 12, 2023, 07:58 PM IST

google News
யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோர் அறிமுக வீரர்களாக டெஸ்டில் களமிறக்கப்படுகின்றனர். (@ICC)
யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோர் அறிமுக வீரர்களாக டெஸ்டில் களமிறக்கப்படுகின்றனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோர் அறிமுக வீரர்களாக டெஸ்டில் களமிறக்கப்படுகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் பிளேயிங் லெவன் வெளியாகியுள்ளது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோர் அறிமுக வீரர்களாக டெஸ்டில் களமிறக்கப்படுகின்றனர்.

கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரஹானே, ஜடேஜா, அஸ்வின், ஷர்துல் தாக்குர், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, அந்த அணி முதலில் விளையாடி வருகிறது. இந்திய பவுலிங் செய்து வருகிறது.

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-இல் இடம் பெறத் தவறிய வெஸ்ட் இண்டீஸ், 2023-2025 உலகக் கோப்பையின் முதல் டெஸ்ட் தொடரில் விளையாடத் தயாராகி இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 34.62 சதவீத புள்ளிகளுடன் எட்டாவது இடத்தைப் பிடித்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அந்த அணியால் தகுதி பெற முடியவில்லை.

குடகேஷ் மோதி, கைல் மேயர்ஸ் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் போன்றவர்கள் காயம் காரணமாக அணியில் இடம் பெறாததால், அனுபவம் வாய்ந்த சில வீரர்களை அந்த அணி இழந்திருக்கிறது.

கிர்க் மெக்கன்சி மற்றும் ரகீம் கார்ன்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மறுபுறம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்ததால், இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லத் தவறியது.

தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ள இந்திய அணி, இந்த தொடரில் கலக்கும் என எதிர்பார்க்கலாம்.

டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பூங்காவில் உள்ள ஆடுகளம் பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் மைதானம் போல செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாளில் பவுலிங்கிற்கு சாதகமாகவும், அதே நேரத்தில் போட்டியின் 2 மற்றும் 3 வது நாளில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டம் தொடர்ந்து முன்னேறும்போது ஆடுகளத்தின் மேற்பரப்பு மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆட்டத்தின் கடைசி இரண்டு நாட்களில் ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பதில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என கருதப்படுகிறது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி