தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Lyca Kovai Kings: கோவை வீரர்கள் 3 பேர் அரை சதம் விளாசல்-மதுரை பந்துவீச்சை வெளுத்து வாங்கியது லைக்கா அணி

Lyca Kovai Kings: கோவை வீரர்கள் 3 பேர் அரை சதம் விளாசல்-மதுரை பந்துவீச்சை வெளுத்து வாங்கியது லைக்கா அணி

Manigandan K T HT Tamil

Jul 02, 2023, 07:18 PM IST

google News
சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. (@TNPremierLeague)
சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.

சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.

டிஎன்பிஎல் 2023 தொடரின் 24வது போட்டி, சீகம் மதுரை பேந்தர்ஸ் - லைக்கா கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையே இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, கோவை அணி முதலில் விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை குவித்தது.

கோவை கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் சுரேஷ் குமார் அதிரடியாக விளையாடி 64 ரன்களை விளாசினார். அந்த அணியின் பி.சச்சினும் அரை சதம் பதிவு செய்து அசத்தினார்.

கேப்டன் ஷாருக் கானும் அரை சதம் பதிவு செய்து ரன் அவுட்டானார்.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை விளையாடவுள்ளது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக பி சச்சின் தன் முதல் அரைசதத்தைப் பதிவு செய்ததோடு 51 பந்துகளில் 67 ரன்கள் குவிக்க, அவருக்கு அடுத்தபடியாக ஓப்பனர் ஜெ சுரேஷ் குமார் வெறும் 21 பந்துகளில் அரைசதம் விளாசி 64 ரன்கள் எடுத்தார் மற்றும் லைகா கோவை கிங்ஸின் கேப்டன் ஷாரூக் கான் இந்த சீஸனில் தன் முதல் அரைசதத்தை வெறும் 20 பந்துகளில் அடித்து இந்த டி.என்.பி.எல்லின் அதிவேக அரைசதத்தை இந்தப் போட்டியில் பதிவு செய்தார்.

சீகம் மதுரை பேந்தர்ஸின் பெளலிங்கைப் பொறுத்தவரை குர்ஜப்நீத் சிங் மற்றும் ஸ்வப்னில் சிங் தலா 2 விக்கெட்களை கைப்பற்ற, மற்ற பெளலர்கள் யாரும் பெரிதளவில் கைகொடுக்காமல் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். இந்த சீஸனின் ப்ளேஆஃப்ஸில் இடம் பிடிக்க சீகம் மதுரை பேந்தர்ஸிற்கு 209 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை லைகா கோவை கிங்ஸ் நிர்ணயித்தது.

விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி