தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Shubman Gill: அதிரடி பேட்டிங் - உலக சாதனை புரிந்த சுப்மன் கில்

Shubman Gill: அதிரடி பேட்டிங் - உலக சாதனை புரிந்த சுப்மன் கில்

Aug 02, 2023, 04:43 PM IST

google News
தொடர்ந்து பேட்டிங் சொதப்பி வந்த சுப்மன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அதிரடியாக பேட் செய்து இரண்டாது அரைசதம் அடித்துள்ளார். அத்துடன் புதியதொரு சாதனையும் புரிந்துள்ளார். (BCCI Twitter)
தொடர்ந்து பேட்டிங் சொதப்பி வந்த சுப்மன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அதிரடியாக பேட் செய்து இரண்டாது அரைசதம் அடித்துள்ளார். அத்துடன் புதியதொரு சாதனையும் புரிந்துள்ளார்.

தொடர்ந்து பேட்டிங் சொதப்பி வந்த சுப்மன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அதிரடியாக பேட் செய்து இரண்டாது அரைசதம் அடித்துள்ளார். அத்துடன் புதியதொரு சாதனையும் புரிந்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்த தொடரில் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வந்த சுப்மன் கில், வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் அதிரடியாக பேட் செய்து அரைசதம் விளாசினார்.

இந்த போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன் களமிறங்கிய இஷான் கிஷன் - சுப்மன் கில் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு143 ரன்கள் சேர்த்தனர். இதில் கில் 64 பந்துகளுக்கு 77 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் தொடர்ந்து இரண்டாவது அரைசதத்தை அடித்துள்ளார். அத்துடன் புதியதொரு மைல்கல் சாதனை ஒன்றையும் அவர் புரிந்துள்ளார்.

இதுவரை 27 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கில் 4 சதங்கள், 6 அரைசதங்கள் என 1437 ரன்கள் எடுத்துள்ளார். இவரது சராசரியானது 62.48 என உள்ளது. இவர் அடித்த இரண்டு சதங்களில் ஒன்று இரட்டை சதமாக உள்ளது.

கில் தற்போது 27 போட்டிகளில் 1437 ரன்கள் எடுத்ததன் மூலம், பாதிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் இமாம் உல் ஹக், 27 போட்டிகளில் 1381 ரன்கள் எடுத்த உலக சாதனையை முறியிடித்துள்ளார்.

27 ஒருநாள் போட்டிகளில் 1300+ ரன்கள் அடித்தவர்கள் லிஸ்டில், தென்ஆப்பரிக்காவின் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் (1353), நெதர்லாந்து அணி வீரர் ரியான் டென் டோஸ்கேட் (1353), இங்கிலாந்து வீரர் ஜோனதன் திராட் (1342), பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (1330), தென்ஆப்பரிக்கா வீரர் ஹசிம் அம்லா (1326), பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான் (1200) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

டாபிக்ஸ்

அடுத்த செய்தி