Asian Atheletics Championship: தடை ஓட்டத்தில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீரர் - ஒரே நாளில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள்
Jul 15, 2023, 06:31 PM IST
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தடை தாண்டுதல் ஓட்ட போட்டியில் இந்தியாவுக்கு இன்று வெண்கலம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த சந்தோஷ் குமார் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
24வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளின் நான்காவது நாளான இன்று இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் கிடைத்துள்ளது.
ஆண்களுக்கான 400 மீ தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இவர் போட்டி இலக்கை 49.09 வினாடிகளில் கடந்துள்ளார்.
25 வயதாகும் சந்தோஷ் குமாருக்கு இது சிறந்த ஓட்டமாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் இவர் சிறந்த ஓட்டமாக 49.49 விநாடிகள் இருந்து வந்தது. இதையடுத்து தனது பழைய சாதனையை அவர் தற்போது முறியிடித்துள்ளார்.
இந்த போட்டியில் 48.64 நொடிகளில் இலக்கை எட்டி கத்தார் வீரரும் தங்க பதக்கத்தையும், 48.96 நொடிகளில் இலக்கை அடைந்து ஜப்பான் வீரர் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர்.
இதைத்தொடர்ந்து ஆண்களுக்ககான நீளம் தாண்டுதல் விளையாட்டில் முரளி ஸ்ரீஷங்கர் வெள்ளிப்பதக்க்தை வென்றுள்ளார். அத்துடன். 2024ஆம் ஆண்டில் பாரிசில் நடைபெறும் ஓலிம்பிக் போட்டியிலும் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
4X400மீ கலப்பு தொடர் ஓட்ட பந்தயத்தில் 3.14 நிமிடங்களில் தங்கம் வென்றுள்ளது இந்திய அணி. ராஜேஷ் ரமேஷ், ஐஸ்வர்யா மிஷ்ரா, அமோஜ் ஜேக்கப், சுபா வெங்கடேசன் ஆகியோர் இந்த கலப்பு அணியில் இடம்பிடித்திருந்தனர்.
இதில் ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன் ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் சர்வேஷ் குஷாரே வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இன்று ஒரு நாளில் மட்டும் இந்தியா இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்ககங்களை வென்றுள்ளது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இதுவரை இந்தியாவுக்கு 6 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்