Sam curran: ஐபிஎல் உதவியாக இருந்தது - தொடர் நாயகன் விருது வென்ற கரன் பேச்சு
Nov 14, 2022, 11:53 PM IST
ஐபிஎல் போட்டிகளில் நான் கற்றுக்கொண்ட பாடம் என ஆட்டத்திறனை மேம்படுத்த உதவிகரமாக அமைந்தது. மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடுவேன் என்று டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற சாம் கரன் கூறியுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் தொடர் மூலம் ஐபிஎல்லில் அறிமுகமானாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி கேப்டன்சியில் விளையாடு நன்கு பட்டை தீட்டப்பட்ட வீரராக மாறிய சாம் கரன் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 13 விக்கெட்டுகள் வீழ்ததி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளது. இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் பெளலிங் சராசரியும் 11.38 என மிகவும் கச்சிதமாக வைத்துள்ளார்.
இறுதிப்போடியை இங்கிலாந்து வெல்வதற்கு, பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை ரன்குவிப்பில் ஈடுபடவிடாமல் இருந்ததில் சாம் கரனின் பந்து வீச்சு பெரும் பங்கு வகித்தது. எந்த வகையில் பேட்ஸ்மேன்களை ரன் எடுக்க வாய்ப்பு தராமல் அவர் பந்து வீசினார்ய இறுதிப்போட்டியில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து டி20 உலகக் கோப்பை 2022க்கான தொடர் நாயகன் விருதை ரசிகர்கள் தரும் ஆதரவின் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யும் விதமாக சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி அறிவித்தது. அதில், இந்தியாவிலிருந்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானிலிருந்து சதாப் கான், ஷாகின் ஆப்ரிடி,இங்கிலாந்திலிருந்து சாம் கரன், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் வேல்ஸ், ஐிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிகந்தர் ராசா, இலங்கை ஆல்ரவுண்டர் ஹசரங்கா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இதில் அதிக வாக்குகளை பெற்ற சாம் கரன் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். விளையாடி அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்த அவர், தனக்கு கிடைத்த தொடர் நாயகன் விருது பற்றி அவர் கூறியதாவது: "ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம், அங்கிருந்து கற்றுகொண்ட பாடம் மிகவும் உதவிகரமாக இருந்தது.
இது போன்ற பெரிய தொடர்கள், பல வீரர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது ஓர் அற்புதமான தருணம். ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் விளையாட வருவேன். காயத்தால் சிகிச்சை பெற்று உடனடியாக அணிக்கு திரும்பாமல் புத்துணர்வு அடைந்ததுடன், நல்ல பயிற்சியும் மேற்கொண்டேன். அதன் விளைவாக அணிக்காக நல்ல பங்களிப்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
முன்னதாக, கடந்த 2021 ஐபிஎல் சீசனில் இரண்டாம் கட்ட போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியபோது சாம் கரனுக்கு முதுகு பகுதியில் அழுத்தம் உண்டாகி முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஓய்வுக்கு திரும்பி சிக்ச்சை மேற்கொண்டார்.
சிகிச்சையிலிருந்கு குணமடைந்தபோதிலும் புத்துணர்ச்சி பெறுவதற்காக மீண்டும் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட சாம் கரன், ஐபிஎல் தொடர் விளையாடுவதை தவிர்த்தார். இதையடுத்து தற்போது தனது அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்து தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார்.
இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் அதிகமாக கவனம் செலுத்துவதே டி20 உலகக் கோப்பை தொடரை வெல்ல முடியாமல் போனதற்கு காரணம் என பலரும் விமர்சித்து வரும் நிலையில், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் ஐபிஎல் போட்டிதான் தனது சிறப்பான ஆட்டத்திறனுக்கு காரணமாக இருந்ததாக கூறுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.