தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sachin Tendulkar: யுனிசெஃப்புடன் கைகோர்த்து குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்க உதவிய சச்சின் டென்டுல்கர்

Sachin Tendulkar: யுனிசெஃப்புடன் கைகோர்த்து குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்க உதவிய சச்சின் டென்டுல்கர்

Aug 09, 2023, 03:59 PM IST

google News
யுனிசெஃப் தெற்கு ஆசிய பிராந்திய நல்லெண்ம தூதராக இருந்து வரும் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டென்டுல்கர் உலக குழந்தைகள் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 3.9 மில்லியன் இலங்கை மக்கள், குழந்தைகளுக்கு போதுமான உணவு கிடைக்க உதவு புரிந்துள்ளார்.

இலங்கை சென்றிருக்கும் சச்சின் டென்டுல்கர் அங்கு கோவிட் பெருந்தொற்று, 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்றவற்றின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை சந்தித்துள்ளார். இந்த களப்பணியின்போது, யூனிசெஃப் இடைநிலை பள்ளி உணவு திட்டத்தின் ஆதரவை பெற்ற பள்ளிகளில் பார்வையிட்ட அங்குள்ள குழந்தைகளுக்கு ஊட்ட்ச்சத்து மிக்க உணவுகளை பெறுவதற்கான வேண்டிய உதவிகளை செய்துள்ளார்.

இந்த இலங்கை பயணம் தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "குழந்தைகள் சிறந்த ஆசிரியர்கள். எளிமையான விஷயங்களில் ஞானத்தைக் காண அவர்கள் நமக்கு உதவுகிறார்கள்.

இலங்கையில் மிகவும் அமைதியான கிராமத்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில், அனைத்து உயிரினங்கள் மீதும் அக்கறை காட்டுவதை நாங்கள் கவனித்தோம்.

அனைத்து குழந்தைகளும் தங்கள் தட்டுகளில் இருந்து சில பகுதிகளை எடுத்து, ஒரு பொதுவான தட்டில் வைக்க பின்னர் அது பறவைகளுக்கு வழங்கப்படுகிறது. பகிர்வு என்பது மிகவும் அழகான விஷயமாக இருக்கும் சிந்தனை. நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று."

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி