Rustom Cooper: உலகிலேயே மூத்த முதல் தர கிரிக்கெட்டர் - 100 வயதை கடந்த இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்
Aug 01, 2023, 12:48 PM IST
மும்பை அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடிய மூத்த வீரரான ரஷ்டம் கூப்பர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 100 வயதை கடந்தார் இந்தியாவை சேர்ந்த மிக மூத்த கிரிக்கெட்டரான ரஷ்டம் கூப்பர். 1944-45 ஆண்டு ரஞ்ச கோப்பை இறுதியில் சதமடித்து மும்பை (அப்போது பாம்பே) அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
மும்பையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் ரஷ்டம் சோராப்ஜி கூப்பர். இவர் கடந்த டிசம்பர் மாதம் 100 வயதை பூர்த்தி செய்தார். இதையடுத்து மும்பையில் உள்ள தனது வீட்டில் தூங்கிய நிலையில் இவரது உயிர் பிரிந்தது. உலகிலேயே உயிருடன் இருந்த மூத்த முதல் தர கிரிக்கெட் வீரராக இருந்த வந்தார். இதையடுத்து அவர் தற்போது உயிருடன் இல்லை.
சுமார் 10 ஆண்டு காலம் 22 முதல் தர கிரிக்கெட் போட்டிகளை விளையாடியிருக்கும் கூப்பர், பேட்டிங்கில் மூன்று சதம், 10 அரைசதங்கள் என1,205 ரன்கள் எடுத்துள்ளார். இவரது சராசரி 52.39 ஆகும். 1944-45 ராஞ்சி கோப்பையை மும்பை அணி வெல்வதற்கு காரணமாக திகழ்ந்தார். அந்த போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியை தேடிதந்தார்.
1944-45 ராஞ்சி சீசனில் மட்டும் 551 ரன்கள் எடுத்த அவர், சராசரியாக 91.83 வைத்திருந்தார். அந்த சீசனில் இறுதிப்போட்டியில் 52 மற்றும் 104 ரன்கள் எடுத்திருந்தார்.
தனது 23வது வயதில் மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்ற அவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸில் படித்துகொண்டே, இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான மிடில்செக்ஸ்க்கு விளையாடினார். ஆனால் அங்கு அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும், ஹார்சே கிரிக்கெட் கிளப்பில் விளையாடியபோது முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்ந்தார்.
1954ஆம் ஆண்டு வழக்கறிஞராக செயல்பட்ட கூப்பர், மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது. உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்ற அவர், கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவில் சிறந்த பேட்டராக இருந்தார்.
உலகின் மூத்த கிரிக்கெட்டராக இருந்த இவரது இறப்புக்கு கிரிக்கெட் உலகை சேர்ந்தவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்