தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Gt Vs Mi: 'எங்கள் தோல்விக்கு இது தான் காரணம்'.. மும்பை கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்!

GT vs MI: 'எங்கள் தோல்விக்கு இது தான் காரணம்'.. மும்பை கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்!

Karthikeyan S HT Tamil

May 27, 2023, 11:35 AM IST

Rohit Sharma: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 குவாலிபையர் 2-வது போட்டியில் மும்பை அணி படுதோல்வி அடைந்தது.
Rohit Sharma: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 குவாலிபையர் 2-வது போட்டியில் மும்பை அணி படுதோல்வி அடைந்தது.

Rohit Sharma: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 குவாலிபையர் 2-வது போட்டியில் மும்பை அணி படுதோல்வி அடைந்தது.

16வது ஐபிஎல் சீசனின் குவாலிஃபையர் 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை எதிர்கொண்டது. அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணியின் சாஹா 18 ரன்களும், சாய் சுதர்சன் 43 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதையடுத்து, ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி 60 பந்துகளில் 129 ரன்கள் விளாசி வெளியேறினார். இதில் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

Olympic 2024: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட 5 பிளேயர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

April Sports Rewind: செஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த குகேஷ், அனல் பறந்த ஐபிஎல்.. ஸ்போர்ட்ஸில் முக்கிய நிகழ்வுகள்

இறுதியில் ஹர்திக் பாண்டியா 13 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டு இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்களிலும், வதேரா 4 ரன்களிலும் வெளியேறினார்.

கேமிரான் கிரீன் 30, திலக் வர்மா 43 மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாக, தனி ஆளாக கெத்து காட்டிய சூர்யகுமார் யாதவ் 38 பந்தில் 61 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இருப்பினும் மும்பை அணி 18.2 ஓவரில் 171 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் மும்பை அணி தொடரிலிருந்து வெளியேறியது. குஜராத் அணி வீரர் மோஹித் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தோல்வி குறித்து பேசிய மும்பை கேப்டன் ரோஹித் சர்மா, "ஷுப்மன் கில் சிறப்பாக பேட்டிங் செய்தார். அடித்து ஆடுவதற்கு ஏற்ற ஆடுகளம். குஜராத் வீரர்கள் 25 ரன்கள் அதிகமாக அடித்து விட்டனர். கிரீன், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார்கள். பவர் பிளேவில் 2 விக்கெட்டுகளை இழந்ததால் மொமண்டம் கிடைக்கவில்லை. 

ஷுப்மன் கில் மாதிரி யாராவது ஒரு பேட்டர் கடைசிவரை விளையாடி இருந்தால் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஏனெனில் இது விளையாடுவதற்கு நல்ல மைதானம். இஷான் கிஷனுக்கு இப்படி ஆனது எதிர்பாராத ஒன்று. கடந்த போட்டியில் சிறப்பாக பந்து விசிய பவுலர்கள் இந்தப் போட்டியில் சரியாக பந்து வீசவில்லை. இன்று விளையாடியதை வைத்து எதையும் மதிப்பிட முடியாது. குஜராத் அணி நன்றாக விளையாடியது. ஷுப்மன் கில் இனிவரும் போட்டிகளிலும், அவரது இந்த ஃபார்ம் தொடரும் என நம்புகிறேன்." என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்