தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Rohit Sharma: சத்தமே இல்லாமல் மற்றொரு சாதனை புரிந்த ரோகித் சர்மா!

Rohit sharma: சத்தமே இல்லாமல் மற்றொரு சாதனை புரிந்த ரோகித் சர்மா!

Manigandan K T HT Tamil

Jan 25, 2023, 10:15 AM IST

Rohit Sharma record in ODI: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 101 ரன்கள் எடுத்து ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 30வது சதத்தை நேற்றைய ஆட்டத்தில் பதிவு செய்தார். (PTI)
Rohit Sharma record in ODI: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 101 ரன்கள் எடுத்து ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 30வது சதத்தை நேற்றைய ஆட்டத்தில் பதிவு செய்தார்.

Rohit Sharma record in ODI: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 101 ரன்கள் எடுத்து ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 30வது சதத்தை நேற்றைய ஆட்டத்தில் பதிவு செய்தார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை பதிவு செய்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முன்னாள் கேப்டன் விராட் கோலி 46 சதங்களுடன் உள்ளார். இவர்களின் வரிசையில் 30 சதங்களுடன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

Olympic 2024: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட 5 பிளேயர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

April Sports Rewind: செஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த குகேஷ், அனல் பறந்த ஐபிஎல்.. ஸ்போர்ட்ஸில் முக்கிய நிகழ்வுகள்

Archer Deepika Kumari: வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக்கிற்கான TOPS திட்டத்தில் மீண்டும் சேர்ப்பு

இந்நிலையில், அவரது சாதனையை நேற்றைய ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

அவரும் தற்போது 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுவரை மொத்தம் 241 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, மொத்தம் 9,782 ரன்களை குவித்துள்ளார்.

ODI இல் 48 அரை சதங்களையும், 30 சதங்களை பதிவு செய்து அசத்தியுள்ளார். அத்துடன் ODI -இல் 3 முறை இரட்டை சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார் ரோகித் சர்மா.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரையும், நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்த ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி தொடர்ச்சியாக ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருவது பாராட்டுக்குரிய வகையில் இருக்கிறது.

அத்துடன், வலுவான இந்திய அணி ODI தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுப்மன் கில், விராட் கோலி, ஹார்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களும் சூப்பர் ஃபார்மில் விளைாடி வருகின்றனர்.

டாபிக்ஸ்