தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Games Tennis: ஆசிய கேம்ஸ் டென்னிஸில் ரோகன் போபண்ணா கூட்டணி தங்கம் வென்று அசத்தல்-ஸ்குவாஷிலும் தங்கம்

Asian Games Tennis: ஆசிய கேம்ஸ் டென்னிஸில் ரோகன் போபண்ணா கூட்டணி தங்கம் வென்று அசத்தல்-ஸ்குவாஷிலும் தங்கம்

Manigandan K T HT Tamil

Sep 30, 2023, 03:53 PM IST

google News
ஆசிய கேம்ஸ் 2023 போட்டியில் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவிலும், ஸ்குவாஷ் போட்டியில் ஆடவர் குழு பிரிவிலும் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. (PTI)
ஆசிய கேம்ஸ் 2023 போட்டியில் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவிலும், ஸ்குவாஷ் போட்டியில் ஆடவர் குழு பிரிவிலும் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது.

ஆசிய கேம்ஸ் 2023 போட்டியில் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவிலும், ஸ்குவாஷ் போட்டியில் ஆடவர் குழு பிரிவிலும் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது.

ஆசிய கேம்ஸில் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் 42 வயதான ரோகன் போபண்ணா - ருதுஜா போசலே தங்கம் வென்று அசத்தினர். இது ஆசிய கேம்ஸில் இந்தியாவுக்கு 9வது தங்கப் பதக்கம் ஆகும்.

இதனிடையே, ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.

ஹாங்சோ ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் டென்னிஸ் சென்டர் கோர்ட் 1 இல், போபண்ணா மற்றும் போசலே ஆகியோர் குறிப்பிடத்தக்க திறமையையும் உறுதியையும் வெளிப்படுத்தினர். ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் நீடித்த இந்த டென்னிஸ் போட்டி, பார்வையாளர்களை இருக்கைகளின் விளிம்பில் அமர வைத்தது என்றால் மிகையல்ல.

கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் போபண்ணா- ருதுஜா போஸ்லே ஜோடி தங்கம் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது அபாரமான பதக்க வேட்டையைத் தொடர்ந்து வருகிறது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி தங்கள் தைவான் சகாக்களான யு-சியோ ஹ்சு மற்றும் ஹாவோ-சிங் சான் ஆகியோரை வென்றது.

முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும், அவர்களின் தைவான் எதிரிகள், மீள்திறனை வெளிப்படுத்தி, இரண்டாவது செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி வலுவான மறுபிரவேசம் செய்தனர்.

பதற்றமும், பரபரப்பும் நிறைந்த கடைசி செட்டில் போபண்ணா- போஸ்லே ஜோடி நிதானம் பெற்று தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. இறுதியில் 10-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு 9-வது தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தனர்.

ஸ்குவாஷிலும் தங்கம்

இந்நிலையில், ஸ்குவாஷ் தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஆண்கள் அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.

இறுதிப்போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி