தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Roger Binny: இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய முதல் ஆங்கிலோ-இந்தியர்!

HBD Roger Binny: இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய முதல் ஆங்கிலோ-இந்தியர்!

Manigandan K T HT Tamil

Jul 19, 2023, 01:20 PM IST

google News
ஸ்காட்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட ரோஜர் பின்னி, இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடிய முதல் ஆங்கிலோ-இந்தியர் ஆவார்.
ஸ்காட்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட ரோஜர் பின்னி, இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடிய முதல் ஆங்கிலோ-இந்தியர் ஆவார்.

ஸ்காட்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட ரோஜர் பின்னி, இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடிய முதல் ஆங்கிலோ-இந்தியர் ஆவார்.

ரோஜர் மைக்கேல் ஹம்ப்ரி பின்னி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இந்தியாவில் கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் அமைப்பான பிசிசிஐயின் 36-வது தலைவராக செயல்பட்டவர்.

அவருக்கு இன்று (ஜூலை 19) பிறந்த நாள்.

2019 முதல் 2022 வரை கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். ரோஜர் பின்னி 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 1985 கிரிக்கெட் உலக சாம்பியன்ஷிப் ஆகியவற்றை வென்ற அணியில் இருந்தவர். இரண்டு முக்கியமான போட்டிகளிலும் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார்.

2000 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய யு-19 அணியின் தலைமை பயிற்சியாளராகவும், தேசிய தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் (ஏ.சி.சி) வளர்ச்சி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

ஸ்காட்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட ரோஜர் பின்னி, இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடிய முதல் ஆங்கிலோ-இந்தியர் ஆவார்.

இவரது மகன் ஸ்டூவர்டு பின்னியும், கர்நாடக கிரிக்கெட் அணிக்காக மாநில போட்டிகளிலும், இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

1983 உலகக் கோப்பை தொடரில் 18 விக்கெட்டுகளையும் வேர்ல்டு சீரிஸ் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியவர்.

கடந்த 1979-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் பின்னி அறிமுகமானார்.

1986-ம் ஆண்டு ஹெட்டிங்லியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவர் சிறந்து பந்துவீச்சாளர் மட்டுமல்ல, சிறந்த ஃபீல்டருமாவார்.

1983-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 என்ற ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படத்தை பாலிவுட் இயக்குனர் கபீர் கான் எடுத்தார். இதில் ரோஜர் பின்னி கதாபாத்திரத்தில் நிஷாந்த் தஹியா நடித்துள்ளார்.

ரோஜர் பின்னிக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி