Rishabh Pant: வெயிட் லிஃப்டிங்கில் மிரட்டும் ரிஷப் பண்ட்! தெறிக்கவிடும் வைரல் விடியோ
Jul 21, 2023, 02:48 PM IST
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் மெல்ல குணமடைந்து வருவதுடன் பிட்னஸை திரும்ப பெறுவதற்கான முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் வெய்ட் லிஃப்டிங் செய்யும் விடியோவை பகிர்ந்து தெறிக்கவிட்டுள்ளார்.
இந்திய அணியிண் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தனது உடல்நிலை குறித்து அவ்வப்போது விடியோக்களை வெளியிட்டு தனது கம்பேக் பற்றி ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிரடி பேட்ஸ்மேனான பண்ட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்தவாறு புத்துணர்வு முகாமில் பங்கேற்பதுடன், தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
கார் விபத்து சிக்கி படுத்த படுக்கையான பண்ட், பின்னர் ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மெல்ல மெல்ல குணமடைந்து வரும் பண்ட் தற்போது வெயிட் லிஃப்ட் செய்யும் அளவும் உடல்நிலை தேறியுள்ளார். இதையடுத்து அந்த விடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள பண்ட், " நீங்கள் விரும்பியதை பெறுவதை காட்டிலும் உழைப்பை வெளிப்படுத்தியதற்கு ஏற்றத்தை பெறுவீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பண்ட் பகிர்ந்த இந்த பதிவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கேஎல் ராகுல் ஆகியோர் கவனிக்கத்தக்க வகையில் ரியாக்ஷனை வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோல் பல கிரிக்கெட் வீரர்களும் ரிஷப் பண்ட் முயற்சிக்கு பாராட்டுகளை குவித்துள்ளனர்.
ரசிகர்கள் பலரும் ரிஷப் பண்ட் ஒர்க் அவுட் விடியோவை சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், நெற்றியில் இரண்டு வெட்டுக்கள், வலது முழங்காலில் தசைநார் கிழிவு, வலது மணிக்கட்டு, கணுக்கால் மற்றும் கால்விரல் என உடலில் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக ஐபிஎல் 2023 தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை மிஸ் செய்த பண்ட், வரும் அக்டோபர், நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரையும் மிஸ் செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் இன்ஸ்டாவில் தனது விவரக்குறிப்பில், இரண்டாவது பிறந்தநாள் என விபத்திலிருந்து மீண்டு வந்த நாளை குறிப்பிட்டிருந்தார் பண்ட். இதைத்தொடர்ந்து தற்போது ஒர்க் அவுட் விடியோவை பகிர்ந்து தெறிக்கவிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடும் வீரராக இருப்பவர் ரிஷப் பண்ட். இவர் அணியில் இல்லாதது அதிரடியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை இந்திய அணி மிஸ் செய்கிறது என்றே கூறலாம்.
டாபிக்ஸ்