Ricky Ponting: பென் ஸ்டோக்ஸ் கருத்துக்கு ரிக்கி பாண்டிங் பதிலடி
Jul 04, 2023, 07:16 PM IST
பேர்ஸ்டோவின் விக்கெட் அப்பீல் விவாதத்திற்குரியது என்று பல ரசிகர்கள் கருதிய நிலையில், பென் ஸ்டோக்ஸ் இந்த முடிவை கேள்விக்குள்ளாக்கியிருந்தார்.
ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் விக்கெட் அப்பீல் குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் கருத்துக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கேள்வி எழுப்பினார்.
பேர்ஸ்டோவின் விக்கெட் அப்பீல் விவாதத்திற்குரியது என்று பல ரசிகர்கள் கருதிய நிலையில், பென் ஸ்டோக்ஸ் இந்த முடிவை கேள்விக்குள்ளாக்கியிருந்தார்.
பேர்ஸ்டோ லைனை விட்டு வெளியேறி பேசியதை அனுமதித்திருக்க வேண்டும் என்றும் போட்டிக்கு பிந்தைய சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்கு ஆஸி., முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
நடுவர் முடிவு செய்யும் வரை பந்து லைவில் இருக்கும், அது ஓவரின் எத்தனையாவது பந்தாக இருந்தாலும் சரி. நீங்கள் உங்கள் கிரீஸை விட்டு வெளியேற அனுமதி கேட்டிருக்க வேண்டும். நீங்கள் அதைச் செய்திருந்தால், நீங்கள் கிரீஸை விட்டு வெளியேறியிருக்கலாம். இதை தான் பீல்டிங் செய்த அணியின் கேப்டனும் கூறியிருக்கிறார்.
களத்தில் இருந்தபோதே பென் ஸ்டோக்ஸ் கேட்டிருக்கலாம். ஆனால், அவர் விளையாடி முடித்த பிறகு அவரது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அவர் களத்திலேயே நடுவரிடம் முறையிட்டிருக்க வேண்டும். எனது காலத்தில் கிரீஸை விட்டு உடனே வெளியேறி வர மாட்டோம். எதிரணியின் கேப்டனிடம் கேட்டுவிட்டே வருவோம். ஆனால், அவ்வாறு பேர்ஸ்டோ கேட்கவில்லை என்றார் பாண்டிங்.
முன்னதாக, "நாங்கள் மதிய உணவின் போது ஆஸ்திரேலியர்களிடம் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை, அவர்களில் ஒரு மூத்த வீரர் கூட அவர்கள் என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பவில்லை. இது என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மிகவும் சிறந்த மனிதர். ஆனால், அவர் எதுவும் குறிப்பிடவில்லை. லார்ட்ஸில் இருந்தவர்கள் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள். அவர்களிடமிருந்து இதுபோன்ற எதிர்வினையை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை" என்று இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்டு பிராட் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்