IPL 2022: ஜெய்ஸ்வால், படிக்கல், ஹெட்மேயர் அதிரடியால் ராயல்ஸ் அபார வெற்றி
May 07, 2022, 11:42 PM IST
தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் கடைசி நேரத்தில் படிக்கல், ஹெட்மேயர் ஆகியோரின் அதிரடியால் 190 ரன்களை சேஸ் செய்து பஞ்சாப் அணியை வீழ்த்தி தனது ப்ளேஆப் வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கியுள்ளது.
இந்த சீசனில் பவர்ப்ளே ஓவர்களில் அபராமாக விளையாடி ரன்களை குவிக்கும் ராஜஸ்தான் ஓபனர்கள் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தனர். 4 ஓவருக்குள்ளாக 16 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் விளாசிவிட்டு தனது பங்களிப்பை அளித்துவிட்ட சென்றார் பட்லர். இவர் சென்ற பிறகு மற்றொரு தொடக்க பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் அதிரடியை தொடர்ந்தார்.
இவருடன் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் தன் பங்குக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்து பவுண்டரிகளை விரட்டினார். 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து சாம்சன் அவுட்டானார்.
விக்கெட்டுகள் ஒரு பக்கம் வீழ்ந்தாலும் தனது அதிரடி பாணி ஆட்டத்தை மாற்றாமல் விளையாடி வந்த ஜெயஸ்வால் அரைசதம் அடித்தார். ஒபனிங்கில் சொதப்பி வந்த தேவ்தத் படிக்கல், இன்றைய போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களிமிறக்கப்பட்டார். இதையடுத்து தனது விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ளும் விதமாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக பேட் செய்து 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 41 பந்துகளில் 68 ரன்கள் எடுத்த ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி கட்டத்தில் பீஸ்ட் மோடுக்கு மாறிய ஹெட்மேயர் 61 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
ஆனால் அணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்த ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்துக்கு அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
19.4 ஓவரில் ராயல்ஸ் அணி வெற்றிக்கான இலக்கை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகள் பெற்று தனது ப்ளேஆப் வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கியுள்ளது. அத்துடன் இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்த நிலையில், இனி வரும் மூன்று போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளேஆப் பற்றி நினைத்து பார்க்க முடியும்.