தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2022: மீண்டும் இந்திய அணியில் இணைந்தாா் ராகுல் டிராவிட்!

Asia Cup 2022: மீண்டும் இந்திய அணியில் இணைந்தாா் ராகுல் டிராவிட்!

Karthikeyan S HT Tamil

Aug 28, 2022, 05:13 PM IST

கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளாா் ராகுல் டிராவிட் அணியில் இணைந்துள்ளாா்.
கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளாா் ராகுல் டிராவிட் அணியில் இணைந்துள்ளாா்.

கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளாா் ராகுல் டிராவிட் அணியில் இணைந்துள்ளாா்.

;இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதனால் ஆசிய கோப்பையில் விளையாட சென்ற இந்திய அணியுடன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அவா் செல்லவில்லை. இதையடுத்து ஆசிய கோப்பை தொடருக்கான இடைக்கால தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மன் நியமிக்கப்பட்டாா்.

ட்ரெண்டிங் செய்திகள்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

இதனிடையே ராகுல் டிராவிட் பிசிசிஐ- யின் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தாா். ராகுலுக்கு சேலான அறிகுறிகளே உள்ளன என்றும் மீண்டும் நடத்தப்படும் கொரோனா சோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னா் இந்திய அணியுடன் அவா் இணைவாா் எனவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ராகுல் ராவிட் கொரோனா பாதிப்பில் இருந்து தற்போது குணம் அடைந்துள்ளாார். இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணியுடன் அவர் இணைந்துள்ளார். இதனைத் தொடா்ந்து இடைக்கால தலைமை பயிற்சியாளராக இருந்த லக்‌ஷ்மன் பெங்களூருக்கு திரும்பினார். ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இன்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்த உள்ள நிலையில் டிராவிட்டின் வருகை அணிக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி