Pro Kabaddi League 2023: ஆரம்பமே அமர்க்களம்..நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூரை வீழ்த்தியது புனே!
Dec 05, 2023, 07:16 AM IST
புரோ கபடி லீக் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது புனே.
புரோ கபடி லீக்கின் 5வது போட்டியில் புனே பால்டன்ஸ் அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 37-33 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் நடப்பு தொடரில் அந்த அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
புரோ கபடி லீக்கின் 10வது சீஸன் ஆட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர், டில்லி, தமிழ் தலைவாஸ், பெங்களூரு, மும்பை, பாட்னா, குஜராத் ஜெயிண்ட்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று இரவு அகமதாபாத்தில் நடந்த 5-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெய்ப்பூர், புனே அணியை எதிர்கொண்டது.
ஜெய்ப்பூர் அணி முதலில் டாஸ் வென்று ரெய்டு செல்லும் வாய்ப்பை புனேவிற்கு வழங்கியது. அதன்படி, ரெய்டு சென்ற புனே அணி கேப்டன் அஸ்லாம் முஸ்தபா தனது அணிக்கு முதல் புள்ளியை பெற்றுத்தந்தார். சுதாரித்து ஆடிய ஜெய்ப்பூர் அணி 14வது நிமிடத்தில் புனே அணியினரை ஆல்அவுட் செய்தது. முதல் பாதியில் ஜெய்ப்பூர் 18-14 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் சுதாரித்துக்கொண்ட புனே தனது முழு பலத்தை காட்டி ஆட்டத்தை துவக்கியது. ஒரு கட்டத்தில் இவ்விரு அணிகளும் 25-25 என சமநிலையில் புள்ளிகளை பெற்று ஆட்டத்தின் போக்கை விறுவிறுப்பாக்கியது.
தொடர்ந்து அசத்திய புனே அணியினர், ஜெய்ப்பூர் அணியை ஆல்அவுட் செய்து 32-26 என முன்னிலை பெற்றனர். இந்த இடத்தில் ஆட்டம் போக்கு புனே அணியினர் வசமாகியது. இதற்கு ஜெய்ப்பூர் அணியினரால் பதிலடி கொடுக்க முடியாமல் திணறினர். ஆட்டநேர முடிவில் புனே அணி 37-33 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த சீசனில் நடந்த பைனலில் ஜெய்ப்பூரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது. புனே அணிக்கு கேப்டன் அஸ்லாம் முஸ்தபா 10 புள்ளிகள் பெற்று கொடுத்தார். மோகித் கோயத் 8 புள்ளிகள் எடுத்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்