தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Neymar: ரொனால்டாவுக்கு பிறகு சவுதி கிளப் அணியில் இணையும் ஸ்டார் வீரர் நெய்மார் - சம்பளமாக எவ்வளவு கோடி தெரியுமா?

Neymar: ரொனால்டாவுக்கு பிறகு சவுதி கிளப் அணியில் இணையும் ஸ்டார் வீரர் நெய்மார் - சம்பளமாக எவ்வளவு கோடி தெரியுமா?

Aug 15, 2023, 12:52 PM IST

google News
சவுதி கால்பந்து லீக் தொடரில் விளையாடி வரும் அல்-ஹிலால் அணியில் இரண்டு சீசன்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளார் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார். (AP)
சவுதி கால்பந்து லீக் தொடரில் விளையாடி வரும் அல்-ஹிலால் அணியில் இரண்டு சீசன்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளார் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார்.

சவுதி கால்பந்து லீக் தொடரில் விளையாடி வரும் அல்-ஹிலால் அணியில் இரண்டு சீசன்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளார் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார்.

பிரேசில் கால்பந்து அணி நட்சத்திர வீரர் நெய்மார், பிரான்ஸை சேர்ந்த பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணிக்கு விளையாடி வருகிறார். பிஎஸ்ஜி என்று அழைக்கப்படும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்புக்காக கடந்த ஆறு ஆண்டுகள் விளையாடி வந்த அவர் தற்போது அல்ஹிலால் கிளப் அணியில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதற்காக அவருக்கு சம்பளமாக இந்திய மதிப்பில் ரூ. 900 கோடி ஊதியம் வழங்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சவுதி அரேபியா புரோ கால்பந்து லீக்கில் இரண்டு சீசன்கள் நெய்மார் அல்-நிசார் அணிக்காக விளையாடவுள்ளார்.

ஏற்கனவே, சவுதி கிளப் அணியான அல்-நசர் என்ற அணியில் போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார். வரலாற்றிலேயே யாருக்கும் கொடுக்காத மிகப் பெரிய விலையை அளித்து அல்-நசர் நிர்வாகம் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இவரை தொடர்ந்து சவுதி கிளப் அணியில் இணையும் மற்றொரு ஸ்டார் வீரராக மாறியுள்ளார் பிரேசில் நாட்டை சேர்ந்த இளம் வீரரான நெய்மார். இவர் 2023, 2024 சீசன்கள் அல்-ஹிலால் அணிக்காக விளையாடுவார் என தெரிகிறது.

கிரிக்கெட் விளையாட்டில் ஐபிஎல் போல், கால்பந்து விளையாட்டில் கோடிக்கணக்கில் பணம் கொட்டும் தொடராக சவுதி புரொ கால்பந்து லீக் தொடர் உள்ளது. 

உலக அளவில் புகழ் பெற்ற கால்பந்து லீக் போட்டிகளில் விளையாடி வரும் பல்வேறு வீரர்களும் சவுதி புரொ லீக் கிளப்  அணிகளின் டீல்களுக்கு சம்மதம் தெரிவிப்பதுடன் அதற்கு ஓப்பந்தமும் செய்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி