Pro Kabbadi League: டிசம்பர் 2 முதல் புரோ கபடி லீக் சீசன் 10! இதுவரை கோப்பை வென்ற அணிகளின் லிஸ்ட் இதோ
Nov 25, 2023, 02:19 PM IST
புரோ கபடி லீக் தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணியாக பாட்னா பைரட்ஸ் இருந்து வருகிறது. நடப்பு சாம்பியனாக இருந்து வரும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் இரண்டாவது முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஐபிஎல் போன்று கபடி விளையாட்டை பிரபலப்படுத்தும் விதமாகவும், இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் புரோ கபடி லீக் போட்டிகள் 2014 முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 9 சீசன்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் பத்தாவது சீசன வரும் டிசம்பர் 2ஆம் தேதி தொடங்குகிறது.
கிரிக்கெட் போன்ற புரோ கபடி லீக் போட்டிகளையும் ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். புரோ கபடி லீக் சீசன் 10 தொடரில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதையடுத்து முதல் போட்டி குஜராத் ஜெயிண்ட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே டிசம்பர் 2ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதே நாளில் மற்றொரு போட்டியாக யு மும்பா - யுபி யோதாஸ் அணிகளுக்கு இடையே நடக்கவுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் போட்டியில் தபாங் டெல்லி அணியை டிசம்பர் 3ஆம் தேதி எதிர்கொள்கிறது. புரோ கபடி லீக் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது.
புரோ கபடி லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள்
புரோ கபடி லீக் முதல் சீசனில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் கோப்பையை வென்றை அணிகளாக ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், யு மும்பா, பாட்னா பைரேட்ஸ், பெங்களுரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ். டபாங் டெல்லி ஆகிய அணிகள் உள்ளனர்.
முதல் சீசனில் சாம்பியன் பட்டத்தை ஜெய்ப்பூர் பிங் பேந்தர்ஸ் அணி வென்றது. இதன் பின்னர் கடந்த 2022இல் நடைபெற்ற 9வது சீசனில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டியது
யு மும்பா அணி புரோ கபடி லீக் இரண்டாவது சீசன் வெற்றியாளராக மாறியது. அந்த சீசனில் 14 லீக் போட்டிகளில் 12இல் அந்த அணி வென்றது.
இதன்பின்னர் தொடர்ச்சியாக மூன்று சீசன்களை பாட்னா பைரேட்ஸ் அணி வென்றது. 2016, 2016, 2017 என ஹாட்ரிக் முறை கோப்பையை வென்றது. 2017 சீசினில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.
2018இல் பெங்களுரு புல்ஸ், 2019இல் பெங்கால் வாரியர்ஸ், 2021இல் தபாங் டெல்லி ஆகிய அணிகள் அடுத்தடுத்த சீசன்களில் வெற்றி பெற்றன.
2017 முதல் புரோ கபடி லீக்கில் பங்கேற்று வரும் தமிழ் தலைவாஸ், கடந்த 2022 சீசனில் 5வது இடத்தை பிடித்தது. இதுவே தமிழ் தலைவாஸ் அணியின் சிறந்த ஆட்டமாக உள்ளது.
டாபிக்ஸ்