தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pro Kabbadi League 2023: 'போடு தகிட தகிட'-ஆரம்பமே அசத்தல்-தமிழ் தலைவாஸ் வெற்றித் தொடக்கம்

Pro Kabbadi League 2023: 'போடு தகிட தகிட'-ஆரம்பமே அசத்தல்-தமிழ் தலைவாஸ் வெற்றித் தொடக்கம்

Manigandan K T HT Tamil

Dec 03, 2023, 09:48 PM IST

google News
Tamil Thalaivas: ப்ரோ கபடி லீக் போட்டியின் 3வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் ஜெயித்துள்ளது. (@ProKabaddi)
Tamil Thalaivas: ப்ரோ கபடி லீக் போட்டியின் 3வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் ஜெயித்துள்ளது.

Tamil Thalaivas: ப்ரோ கபடி லீக் போட்டியின் 3வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் ஜெயித்துள்ளது.

தமிழ் தலைவாஸ் vs தபாங் டெல்லி இடையேயான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 42-31 என்ற புள்ளிக் கணக்கில் ஜெயித்தது. தமிழ் தலைவாஸ் மற்றும் தபாங் டெல்லி ஆகியவை தங்களது புரோ கபடி லீக் 2023 போட்டியின் முதல் ஆட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 4) எதிர்கொண்டது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டேடியாவின் தி அரினாவில் இரவு நடந்த முதல் போட்டியில் இரு அணிகளும் மோதின.

தமிழ் தலைவாஸ் தங்கள் சீசனைத் தொடங்குவதற்கு இது ஒரு அற்புதமான வெற்றியாகும். அவர்கள் தங்கள் பிகேஎல் 2023 தொடக்க போட்டியை தபாங் டெல்லியை 42-31 என்ற கணக்கில் வென்று தொடங்கியிருக்கின்றனர்.

முன்னதாக, புரோ கபடி லீக் 10வது சீசன் கோலாகலமாக நேற்று தொடங்கியது. இதையடுத்து இந்த சீசனின் இரண்டாவது போட்டியில் யு மும்பா - யுபி யோதாஸ் அணிகள் மோதின. குஜராத் ஜெயிண்ட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் போட்டிக்கு அடுத்தபடியாக அகமதாபாத்திலுள்ள ஈகேஏ அரீனாவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 34 - 31 புள்ளி கணக்கில் யு மும்பா அணி வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் ரெய்ட் புள்ளிகளாக தலா 19 பாயிண்ட்களை பெற்றன. அதேபோல் இரண்டு அணிகளும் சூப்பர் ரெய்ட் புள்ளிகள் எடுக்கவில்லை.

டேக்கில் புள்ளி 13, ஆல் ஆவுட் 2 என எடுத்தது யு மும்பா அணி. எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெறவில்லை.

புரோ கபடி லீக் தொடரின் முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயிண்ட்ஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி