Pro Kabaddi League: ரசிகர்கள் ஏமாற்றம்.. தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி!
Dec 27, 2023, 10:20 PM IST
Pro Kabaddi League 2023: சென்னையில் நடந்த ப்ரோ கபடி லீக்கில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. இதில் தமிழ் தலைவாஸ் அணி தோற்றது. மற்றொரு ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
ப்ரோ கபடி லீக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் டபாங் டெல்லியும் மோதின. இந்த ஆட்டம் 32-32 என்ற கணக்கில் சமன் ஆனது. மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. அந்த ஆட்டத்தில் 33-30 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் ஜெயித்தது.
கடைசி வரை மல்லுக்கட்டிய போதிலும், தமிழ் தலைவாஸ் தோற்றது. தொடர்ச்சியாக இது தமிழ் தலைவாஸுக்கு 4வது தோல்வி ஆகும். இந்த சீசனில் இதுவரை அந்த அணிக்கு 6வது தோல்வி ஆகும். குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு 5வது வெற்றி ஆகும்.
தமிழ்தலைவாஸ் அணியின் அஜிங்யா பவார், ரெய்டு மூலம் 8 புள்ளிகளை பெற்றார். டேக்கிள் மூலம் 1 புள்ளி, போனஸ் மூலம் 2 புள்ளிகளையும் பெற்றார். நரேந்தர் ரெய்டு மூலம் 5, போனஸ் மூலம் 2 புள்ளிகளை ஈட்டினார்.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-டபாங் டெல்லி
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜுன் தேஷ்வால் 5 புள்ளிகளையும் ரெய்டு மூலமூலம், டேக்கிள் மூலம் 1 புள்ளியையும் போனஸ் மூலம் 7 புள்ளியையும் வென்றார்.
அங்குஷ் டேக்கிள் மூலம் 6 புள்ளிகளையும் போனஸ் மூலம் 1 புள்ளியையும் வென்றார்.
டபாங் டெல்லியைப் பொறுத்தவரை அஷு மாலிக் ரெய்டு மூலம் 6 புள்ளிகளையும், போனஸ் மூலம் 1 புள்ளியையும் ஈட்டித் தந்தார்.
நவீன் குமார் 4 ரெய்டு புள்ளிகளை எடுத்துக் கொடுத்தார்.
நெருக்கமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் இறுதியில் சமன் ஆனது.
முன்னதாக, செவ்வாய்கிழமை நடைபெற்ற புரோ கபடி லீக் சீசன் 10 ஆட்டத்தில் புனேரி பல்தான் ஆதிக்கம் செலுத்தி 46-28 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது. பங்கஜ் மோஹித் சூப்பர் 10 ஐ கொண்டு வந்ததால் ஆட்டத்தின் நட்சத்திரமாக இருந்தார், அபினேஷ் நடராஜன் ஹை 5 உடன் முடித்தார்.
புனேரி பல்தான், கடந்த வாரம் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்ற பிறகு தற்போது நேற்றைய ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது.
புனேரி பல்தான் அணி ரெய்டு மூலம், 25 புள்ளிகளையும், சூப்பர் ரெய்டு மூலம் 2 புள்ளிகளையும், டேக்கிள் புள்ளிகள் மூலம் 15 ரெய்டுகளையும் பெற்றது.
ஆல் அவுட் பாயிண்ட்ஸ் 6 கிடைத்தது. பங்கஜ் மோஹித் 10 ரெய்டு புள்ளிகளையும், 1 டேக்கிள் புள்ளியையும் எடுத்தார்.
மோஹித் கோயத் 7 புள்ளிகளை ரெய்டு மூலமும் 2 புள்ளிகளை டேக்கிள் மூலமும் எடுத்தார். அஸ்லாம் இனாம்தர் ரெய்டு, டேக்கிள் மூலம் தலா 2 புள்ளிகளை பெற்றார். பாட்னா பைரேட்ஸ் அணி ரெய்டு மூலம் 17 புள்ளிகளையும், சூப்பர் ரெய்டு மூலம் ஒரு புள்ளி கூட எடுக்கவில்லை.
டேக்கிள் பாயிண்டுகள் 8-ஐ பாட்னா எடுத்தது. எக்ட்ரா பாயிண்ட் மூலம் 3 பாயிண்ட் பாட்னாவுக்கு கிடைத்தது.
பாட்னா வீரர் சச்சின், ரெய்டு மூலம் 2, டேக்கிள் மூலம் 2, போனஸ் மூலம் 4 என மொத்தம் 8 பாயிண்டுகளை அணிக்காக எடுத்துக் கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு வந்தது புனேரி பல்தான். ஒரே ஒரு தோல்வி மூலம் அந்த அணி 31 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
பாட்னா இந்த சீசனில் இதுவரை ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணி 17 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.
இதனிடையே, இன்றைய ஆட்டத்தில் ஜெய்ப்பூர், டபாங் டெல்லி அணி மோதும் ஆட்டம், இரவு 8 மணிக்கும், தமிழ் தலைவாஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் மோதும் ஆட்டம் இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
டாபிக்ஸ்