தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pkl Schedule 2023: சென்னையில் ப்ரோ கபடி லீக் போட்டிகள் எப்போது?-முழு Schedule லிஸ்ட் இதோ

PKL Schedule 2023: சென்னையில் ப்ரோ கபடி லீக் போட்டிகள் எப்போது?-முழு Schedule லிஸ்ட் இதோ

Manigandan K T HT Tamil

Nov 26, 2023, 11:14 AM IST

google News
ப்ரோ கபடி லீக்கின் பத்தாவது சீசன் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் மோதுகிறது.
ப்ரோ கபடி லீக்கின் பத்தாவது சீசன் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் மோதுகிறது.

ப்ரோ கபடி லீக்கின் பத்தாவது சீசன் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் மோதுகிறது.

புரோ கபடி லீக் பத்தாவது சீசனுக்கான அட்டவணையைப் பார்ப்போம். அகமதாபாத்தில் உள்ள ட்ரான்ஸ்ஸ்டேடியா ஸ்டேடியத்தில் உள்ள அரங்கில் டிசம்பர் 2, 2023 அன்று முதல் போட்டி தொடங்கும்.

லீக் பின்னர் ஒவ்வொரு அணியின் சொந்த நகரங்களுக்கும் நகரும். லீக் சுற்று போட்டிகள் டிசம்பர் 2, 2023 முதல் பிப்ரவரி 21, 2024 வரை நடைபெறும்.

பிளேஆஃப் போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

அகமதாபாத்தில் போட்டிகள் டிசம்பர் 2-7 வரை நடைபெறும். அதன்பின், லீக் பின்வரும் நகரங்களில் நடைபெறும்- பெங்களூரு (8-13 டிசம்பர் 2023), புனே (15-20 டிசம்பர் 2023), சென்னை (22-27 டிசம்பர்). 2023), நொய்டா (29 டிசம்பர் 2023 - 3 ஜனவரி 2024), மும்பை (5-10 ஜனவரி 2024), ஜெய்ப்பூர் (12-17 ஜனவரி 2024), ஹைதராபாத் (19-24 ஜனவரி 2024), பாட்னா (26-31 ஜனவரி 2024), டெல்லி (2-7 பிப்ரவரி 2024), கொல்கத்தா (9-14 பிப்ரவரி 2024) மற்றும் பஞ்ச்குலா (16-21 பிப்ரவரி).

ப்ரோ கபடி லீக்கின் பத்தாவது சீசன் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் மோதுகிறது.

கிரிக்கெட் போன்ற புரோ கபடி லீக் போட்டிகளையும் ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் போட்டியில் தபாங் டெல்லி அணியை டிசம்பர் 3ஆம் தேதி எதிர்கொள்கிறது. புரோ கபடி லீக் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது.

முதல் சீசனில் சாம்பியன் பட்டத்தை ஜெய்ப்பூர் பிங் பேந்தர்ஸ் அணி வென்றது. இதன் பின்னர் கடந்த 2022இல் நடைபெற்ற 9வது சீசனில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

Google News: https://bit.ly/3onGqm9 

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி