FIFA WorldCup 2022: யாருக்கு ரூ. 223 கோடி?.. மொராக்கோ - குரோஷியா பலப்பரீட்சை!
Dec 17, 2022, 12:38 PM IST
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இன்று மொராக்கோ - குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக கருதப்படும் பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் கத்தாரில் நடக்கிறது. உலகின் 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்கின. பிரேசில், ஜெர்மனி, போர்ச்சுகல், ஸ்பெயின் உள்ளிட்ட 30 அணிகள் வெளியேறின. பெரும் பரபரப்புக்கு இடையே நடைபெற்ற முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா அணி 3-0 என குரோஷியாவை வீழ்த்து பைனலுக்கு முன்னேறியது.
இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், 22-வது இடத்தில் உள்ள ஆப்பிரிக்க அணியான மொரோக்கோவை எதிர்கொண்டது. வரலாற்றில் முதன்முறையாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற மொராக்கோ அணி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும் இந்த போட்டியில் 2-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி போராடி வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி பைனலில் அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நாளை (டிச.18) நடைபெற உள்ள நிலையில், மூன்றாவது இடத்துக்கான போட்டி கலீபா சர்வதேச மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்த போட்டியில் மொரக்கோ - குரோஷியா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ரூ. 223 கோடி பரிசுத் தொகையை தட்டிச் செல்லும். இதனால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பரிசு தொக எவ்வளவு?
உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு தங்கபதக்கத்துடன் ரூ.337 கோடி, இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு வெள்ளிப்பதக்கத்துடன் ரூ. 248 கோடி பரிசு வழங்கப்படும். மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு வெண்கலப்பதக்கத்துடன் ரூ.223 கோடி பரிசை தட்டிச் செல்லும். மூன்றாவது இடத்துக்கான மோதலில் தோல்வியுற்று, நான்காம் இடம்பெறும் அணிக்கு பதக்கம் கிடையாது. ரூ. 207 கோடி பரிசு மட்டும் வழங்கப்படும்.
டாபிக்ஸ்