Prithvi Shaw Double Century: இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் தொடரில் இரட்டை சதம் விளாசிய பிருத்வி ஷா
Aug 10, 2023, 08:29 AM IST
England Domestic Cricket: நார்த்தாம்ப்டன்ஷையர் அணி டாஸ் ஜெயித்த பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 415 ரன்களை குவித்தது.
ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் நார்த்தாம்ப்டன்ஷையர் அணிக்காக பிருத்வி ஷா 129 பந்துகளில் இரட்டை சதம் பதிவு செய்தார்.
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ராயல் லண்டன் ஒரு நாள் கோப்பை போட்டித் தொடரில் நார்த்தாம்ப்டன்ஷையர் அணிக்காக இந்தியாவைச் சேர்ந்த பிருத்வி ஷா ஒப்பந்தமானார்.
நேற்று கன்டி மைதானத்தில் நடந்த ஆட்டம் ஒன்றில் நார்த்தாம்ப்டன்ஷையர்-சோமர்செட் அணிகள் மோதின.
நார்த்தாம்ப்டன்ஷையர் அணி டாஸ் ஜெயித்த பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 415 ரன்களை குவித்தது.
பின்னர் விளையாடிய சோமர்செட் 45.1 ஓவரில் 328 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
முன்னதாக, நார்த்தம்ப்டன்ஷையர் அணிக்காக 126 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார் பிருத்வி ஷா. ஒட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் அவர் 153 பந்துகளில் 244 ரன்களை குவித்தார்.
தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்து அதிரடி காண்பித்தார் பிருத்வி.
ரிகார்டோ 47 ரன்களும், சாம் ஒயிட்மேன் 54 ரன்களும் விளாசினர்.
எமிலியோ கே 30 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சோமர்செட் அணியில் ஆன்ட்ரூ உமீத் மட்டுமே 77 ரன்கள் விளாசினார். அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் சான் டிக்சன் அரை சதம் பதிவு செய்தார்.
இது நடப்புத் தொடரில் பிருத்வி ஷாவுக்கு 3 வது ஆட்டம் ஆகும்.
பிருத்வி ஷா 25 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை அடித்தார். 2022-23 சீசனில் இங்கிலாந்து டொமஸ்டிக் கிரிக்கெட் போட்டித் தொடருக்காக ஒப்பந்தமான ஐந்தாவது இந்திய வீரர் பிருத்வி ஷா ஆவார்.
சஸ்ஸெக்ஸ் அணிக்காக புஜாரா, லெய்செஸ்டர்ஷையர் அணிக்காக ரஹானே, கென்ட் அணிக்காக அர்ஷ்தீப் சிங், வோர்செஸ்டர்ஷையர் அணிக்காக நவ்தீப் சைனி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
கடைசியாக 2023 ஜனவரியில் நடந்த டி20 தொடருக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட பிருத்வி ஷா, தேர்வாளர்களுக்கு சாதகமாக இல்லை. இங்கிலாந்து செல்வதற்கு முன்பு துலீப் டிராபியில் பிருத்வி ஷா பெரிய அளவில் முத்திரை பதிக்கவில்லை.
ரஞ்சி டிராபி சீசனில் அசாமுக்கு எதிராக 379 ரன்கள் உட்பட 6 போட்டிகளில் 595 ரன்கள் குவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்