தசைகளை வலுப்படுத்தும் போல் நடனத்தின் நன்மைகள்!
Jan 21, 2022, 06:33 PM IST
போல் நடனம் மீது ஆர்வம் ஏற்பட்டு நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால் முதலில் உங்கள் உடலில் உள்ள சில தசைகளை வலுப்படுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த நடனமானது ஒரு கலை என்பதைக் காட்டிலும், உடலின் தசைகளை வலுவடையச் செய்வதற்கான சிறந்த பயிற்சியாகவும் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு கச்சிதமான உடல் அமைப்பு இந்த போல் நடனம் மூலம் பெறப்படுகிறது. நீங்கள் போல் நடனம் ஆடுவதற்கு உங்கள் உடலில் உள்ள முக்கியமான ஐந்து தசைகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
1. கைகள் மற்றும் தோள்கள்
போல் நடனம் மேற்கொள்ள உடலில் மேற்பாகங்கள்தான் அதிகமாக பயன்படுகிறது. இந்த நடனத்தின் பெரும்பாலான அசைவுகள் கைகள் மற்றும் தோள்களின் வலிமையைப் பொறுத்துதான் அமைகிறது. அதற்கு ஏற்றாவாறே கம்பத்தில் சுழற்சி செய்ய வேண்டும். அந்த வகையில் போல் நடனம் கற்றுக்கொடுப்பவர்கள் பெரும்பாலோனோர் முதலில் உங்களது கைகள் மற்றும் தோள்களின் பலத்தை அதிகரிக்குமாறு அறிவுறுத்துவார்கள்.
2. முக்கிய தசைகள்
உடலில் உள்ள முக்கிய தசைகள் அனைத்தும் போல் நடனத்தின்போது பெரும்பங்கு வகிக்கிறது. குறிப்பாக மேலிருந்து கீழாக நடனம் ஆடும்போது இதை உணரலாம்.
நீங்கள் ஒர் அசைவிலிருந்து வெளியேறும்போதும் அல்லது வேரு அசைவுகளுக்கு மாறும்போதும், தலைகீழாக நகருதல், மாறுதலின்போது உடலில் முறுக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இதுபோன்ற நகர்வுகளின்போது புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட வேண்டி இருப்பதால் உடலில் உள்ள முக்கிய தசைகள் அதற்கு பழகிக்கொள்ளுமாறு பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
3. பின்பகுதி தசைகள்
போல் நடனம் உடலின் பின்பகுதி தசைகளை வளர்தெடுக்க உதவுகிறது. வலுவான தசைகள் சரியான தோரணையை வெளிப்படுத்த உதவும்.
4. கால் தசைகள்
போல் நடனம் ஆடுவதற்கு உங்கள் உடலின் மேல் பகுதி மட்டுமில்லாமல் கால்களையும் சரியான அளவில் பயன்படுத்த வேண்டியுள்ளது. உடல் கீழ் பகுதியில் கால்கள் அதிகமாக அசைவுகள் வெளிப்படுத்த வேண்டி இருப்பதால், கால் தசைகளை வலுப்படுத்த வேண்டும்.
5. தொடைப்பகுதி தசைகள்
இறுதியாக தொடைப் பகுதி தசைகள், க்ளூட்கள், குவாட் தசைகளை வலுப்பெறச் செய்ய வேண்டும். தொடர்ச்சியான இயக்கம் உங்கள் தொடை தசைகளை வலுப்படுத்துகிறது. காயங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க உங்கள் தொடைப்பகுதி வலுவாக இருப்பது அவசியம்.
போல் நடனத்தால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பிரபல ஃபிட்னஸ் பயிற்சியாளரும், தொழில்முறை போல் நடன கலைஞருமான தானியா சூடன் விவரித்துள்ளார்.
1. வலிமைக்கான பயிற்சி
உடலிலுள்ள ஒட்டுமொத்த தசைகளையும் கட்டுப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும் கற்றுத்தருகிறது. போல் நடனத்துக்கான கம்பங்கள் உங்கள் முழு உடலை தூக்கவும், தாங்கவும் செய்கிறது. இதனால் உங்கள் உடலின் பின் பகுதி தசைகள், பைசப்ஸ், ட்ரைசப்ஸ் மற்றும் முன் கைகள் இயல்பாக வலுபெறுகின்றன.
2. உடல் இயக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மை கிடைக்கிறது
உடல் இயக்கத்தால் நெகிழ்வுத்தன்மை பெறுகிறது. உடலை கம்பத்தில் நன்கு வளைத்துக் கொண்டு நடனமாடி, உடலை நீட்டிப்பதால் உடல் பாகங்கள் நன்கு விரிவடைகிறது.
3. கார்டியோ
உங்கள் வலிமை மற்றும் தாங்கும் உறுதியை சோதிக்க போல் நடனம் சிறந்த பயிற்சியாக உள்ளது. ஒரு நேரத்தில் பல்வேறு விதமான அசைவுகளை வெளிப்படுத்துவதால் இது விரைவில் சோர்வை ஏற்படுத்தும் பயிற்சியாகவும் உள்ளது.
4. மன நல ஆரோக்கியம்
செரோடோனின் என்டோர்பின்ஸ் எனப்படும் மகிழ்ச்சி தரும் ஹார்மோன்கள் போல் நடனம் ஆடும்போது அதிகமாக சுரக்கப்படுகிறது. எனவே உங்கள் மனஅழுத்தம், பயத்தை போக்க இந்த நடனத்தை மேற்கொள்ளலாம்
5. மூட்டு வலியை குறைக்கிறது
உங்கள் உடலில் உள்ள தசைகளின் விரிவுத்தன்மை, நெகிழ்வுதன்மையை அதிகரிப்பதுடன், மூட்டுகளில் ஏற்படும் பிரச்னைகளை வெகுவாகக் குறைக்கிறது.