தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  United Cup: ஐக்கிய கோப்பை கலப்பு அணிகள் டென்னிஸ் போட்டி - காலிறுதியை எட்டிய போலந்து

United Cup: ஐக்கிய கோப்பை கலப்பு அணிகள் டென்னிஸ் போட்டி - காலிறுதியை எட்டிய போலந்து

Marimuthu M HT Tamil

Jan 01, 2024, 08:13 PM IST

google News
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்த யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் சாரா சொரிப்ஸ் டார்மோ மற்றும் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினா ஆகியோருக்கு எதிரான கலப்பு இரட்டையர் ஆட்டத்தின் போது போலந்தின் இகா ஸ்வியாடெக் மற்றும் ஹூபர்ட் ஹர்காக்ஸுடன் மோதினார். (AFP)
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்த யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் சாரா சொரிப்ஸ் டார்மோ மற்றும் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினா ஆகியோருக்கு எதிரான கலப்பு இரட்டையர் ஆட்டத்தின் போது போலந்தின் இகா ஸ்வியாடெக் மற்றும் ஹூபர்ட் ஹர்காக்ஸுடன் மோதினார்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்த யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் சாரா சொரிப்ஸ் டார்மோ மற்றும் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினா ஆகியோருக்கு எதிரான கலப்பு இரட்டையர் ஆட்டத்தின் போது போலந்தின் இகா ஸ்வியாடெக் மற்றும் ஹூபர்ட் ஹர்காக்ஸுடன் மோதினார்.

ஐக்கிய கோப்பை கலப்பு அணிகள் டென்னிஸ் போட்டி இன்று நடைபெற்றது. இதில் தரவரிசையில் நம்பர் 1-ல் உள்ள டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்விடெக் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில் வெற்றி பெற்று , போலந்து நாட்டை காலிறுதிக்கு அழைத்துச்சென்றார்.

ஸ்பெயினின் வீராங்கனை சாரா சொரிப்ஸ் டார்மோவுக்கு எதிரான ஒற்றையர் ஆட்டத்தில், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் வீராங்கனை ஸ்வியாடெக் டென்னிஸ் மைதானத்திற்குள் வந்தார். ஸ்பெயின் வீரர் அலெக்சாண்டர் டேவிடோவிச் ஃபோகினா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 9-வது இடத்தில் உள்ள போலந்துவீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ்-ஐ வீழ்த்தி ஸ்பெயினை 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றார்.

ஆனால், போலந்து டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்விடெக் 6-2, 6-1 என்ற கணக்கில், ஸ்பெயினின் வீராங்கனை சாரா சொரிப்ஸ் டார்மோவை தோற்கடித்து கலப்பு இரட்டையர் ஆட்டத்துக்குச் செல்வதற்கு தகுதிபெற்றார்.

நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சாம்பியனான போலந்து வீராங்கனை ஸ்விடெக் மற்றும் போலந்து டென்னிஸ் வீரர் ஹர்காக்ஸ் ஆகியோர் 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கலப்பு இரட்டையர் பிரிவில், போலந்தை காலிறுதிக்கு தகுதிபெறவைத்தனர்.

சிட்னியில், மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஒற்றையர் இறுதிப் போட்டியாளரான நார்வே வீரர் காஸ்பர் ரூட், குரோஷியாவுக்கு எதிரான ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் இதே போன்ற வெற்றிகளுடன் தனது நாடான நார்வேயின் காலிறுதி வாய்ப்புகளை உயிர்ப்பித்தார்.

அதேபோல், குரேஷிய வீரரான டோனா வெகிச் 7-5, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் மாலினே ஹெல்கோவை வீழ்த்தி, குரோஷிய நாட்டை 1-0 என புள்ளிக்கணக்கில் முன்னிலை பெறச்செய்தார். ஆனால், ரூட் - போர்னா கோரிக்-ஐ 6-4, 6-1 என்ற கணக்கில் தோற்கடித்து ஒரு தீர்க்கமான டை பிரேக்கிற்கு அனுப்பினார். இந்த டைபிரேக்கரில் நார்வே உரிமை கோரியது.

இறுதியாக நார்வே வென்று, குரேஷியா வெளியேறியது. நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான எஞ்சிய மீதமுள்ள குரூப் எஃப் போட்டியின் முடிவு செவ்வாய்க்கிழமை தெரியவரும்.

இன்று நடந்த ஆட்டங்களில், அமெரிக்கா பிரிட்டனை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் எதிர்கொண்டது. சிட்னியில் நடந்த போட்டியில் பிரான்ஸ் ஜெர்மனியுடன் விளையாடின.

பெர்த் நகரில், இரண்டு காலிறுதிப் போட்டிகள் புதன்கிழமை நடைபெறும். சிட்னியின் காலிறுதிப் போட்டிகள் வியாழன் மற்றும் வெள்ளியில் நடைபெறும். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிட்னியின் கென் ரோஸ்வால் அரங்கில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி