PKL 2024: தொடரும் தோல்வி பயணம்! ஜெய்ப்பூருக்கு எதிராக போராடி வெற்றியை கோட்டைவிட்ட தெலுங்கு டைட்ன்ஸ்
Jan 12, 2024, 10:15 PM IST
முதல் பாதியில் முழுவதுமாக சரண்டரான தெலுங்கு டைட்டன்ஸ், இரண்டாம் பாதியில் விஸ்வரூபம் எடுத்தது. கடைசி வரை போராட்டத்தை வெளிப்படுத்தி 3 புள்ளிகளில் வெற்றியை நழுவவிட்டது.
ப்ரோ கபடி லீக் 2024 தொடர் மும்பையை தொடர்ந்து தற்போது ஜெய்ப்பூருக்கு நகர்ந்துள்ளது. அங்குள்ள சவாய் மாண்சிங் இண்டோர் ஸ்டேடியத்தில் அடுத்த கட்டமாக நடைபெறுகின்றன. இதையடுத்து தொடரின் 67வது போட்டி உள்ளூர் அணியான ஜெயிப்பூர் பிங்க் பேந்தர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
கடைசி 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்த தெலுங்கு டைட்டன்ஸ் இன்று வெற்றி பெறுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியை தழுவியது. ஆட்டத்தின் முதல் பாதியில் புள்ளிப்பட்டியலில் டாப் இடத்தில் இருக்கும் ஜெய்ப்பூர் அணியிடம் முழுவதுமாக சரண்டரானது.
ஆனால் இரண்டாம் பாதியில் அப்படியே நேர்மாறாக விளையாடிய தெலுங்கு டைட்டன்ஸ் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று முன்னேறியது. கடைசி வரை போராட்டத்தை வெளிப்படுத்திய தெலுங்கு டைட்டன்ஸ் 3 புள்ளிகளில் வெற்றியை நழுவவிட்டது.
முழு ஆட்ட நேர முடிவில் 38-35 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தொடரின் 7வது வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 21 ரெயிட், 11 டேக்கிள், 4 ஆல்அவுட், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெற்வில்லை.
தெலுங்கு டைட்ன்ஸ் அணி 16 ரெயிட், 18 டேக்கிள் புள்ளிகள், 9 ஆல் அவுட் புள்ளிகள், 4 ஆல் அவுட், 6 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.
ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் ரெய்டர் அர்ஜுன் தேஷ்வால் 13 ரெயிட், ஒரு போனஸ் புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார்.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் ப்ரோ கபடி லீக் தொடரில் முதல் பாதியாக 11 போட்டிகளை விளையாடியிருக்கும் தெலுங்கு டைட்டன்ஸ் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று விளையாடிய 12வது போட்டியிலும் தோல்வியை தொடர்ந்துள்ளது. எனவே ப்ளேஆஃப் வாய்ப்பு தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு மங்கியுள்ளது.
ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 11 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று 2வது இடத்தில் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்