தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pkl 2024: உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் தெறி ஆட்டம்! 17 புள்ளிகளில் யுபி யோதஸை போட்டு தாக்கிய தெலுங்கு டைட்ன்ஸ்

PKL 2024: உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் தெறி ஆட்டம்! 17 புள்ளிகளில் யுபி யோதஸை போட்டு தாக்கிய தெலுங்கு டைட்ன்ஸ்

Jan 21, 2024, 10:09 PM IST

google News
உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்தால் 7 தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றியை பெற்றுள்ளது தெலுங்கு டைட்டன்ஸ். இது அந்த அணிக்கு சீசனின் இரண்டாவது வெற்றியாக அமைந்துள்ளது.
உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்தால் 7 தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றியை பெற்றுள்ளது தெலுங்கு டைட்டன்ஸ். இது அந்த அணிக்கு சீசனின் இரண்டாவது வெற்றியாக அமைந்துள்ளது.

உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்தால் 7 தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றியை பெற்றுள்ளது தெலுங்கு டைட்டன்ஸ். இது அந்த அணிக்கு சீசனின் இரண்டாவது வெற்றியாக அமைந்துள்ளது.

ப்ரோ கபடி லீக் 2024 தொடர் ஹைதராபாத்திலுள்ள கச்சபவுலி இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தொடரின் 81வது போட்டியில் உள்ளூர் அணியான தெலுங்கு டைட்டன்ஸ் - யுபி யோதாஸ் அணிகள் மோதின. தொடர்ச்சியாக 7 தோல்விகளை பெற்றிருந்த உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் வெற்றி பெற்று அசத்தியது. தெலுங்கு அணிக்கு இது சீசனின் இரண்டாவது வெற்றியாக அமைந்தது.

ஆட்டத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதி என இரண்டிலும் தெலுங்கு டைட்டன்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்று வந்து தெலுங்கு டைட்ன்ஸ், அதை கடைசி வரை தக்க வைத்துக்கொண்டது. இதனால் முழு ஆட்ட நேர முடிவில் 49-32 என்ற புள்ளிக் கணக்கில் யுபி யோதாஸ் அணியை வீழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ். 17 புள்ளிகள் வித்தியாசத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் பெற்றிருக்கும் இந்த வெற்றி மிகப் பெரிய வெற்றியாக உள்ளது.

முதல் பாதியில் ரெயிட், டேக்கிள் புள்ளிகளிலும், இரண்டாம் பாதியில் டேக்கிளில் மட்டும் தெலுங்கு டைட்டன்ஸ் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ், யுபி யோதாஸ் என இரண்டு அணிகளும் சமநிலை பெற்றது. யுபி யோதாஸ் அணி முதல் பாதி, இரண்டாம் பாதி என ரெயிட், டேக்கிள் ஆகியவற்றில் முன்னிலை பெறவில்லை.

இந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 28 ரெயிட், 13 டேக்கிள், 6 ஆல்அவுட், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. இவற்றுடன் 4 சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெற்றது.

அதே போல் யு மும்பா அணி 23 ரெயிட், 7 டேக்கிள்,2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஆல்அவுட் மற்றும் சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெறவில்லை.

தெலுங்கு டைட்டன்ஸ் கேப்டனும், ரெய்டருமான பவுன் ஷெராவத் 13 ரெயிட், 1 டேக்கிள், 2 போனஸ் என 16 புள்ளிகளை பெற்று டாப் இடத்தில் உள்ளார்.

இந்த சீசனில் தொடர்ச்சியாக கடைசி இடத்தில் இருந்து வரும் அணியாக தெலுங்கு டைட்டன்ஸ் உள்ளது. கடைசியாக கடந்த மாதம் 22ஆம் தேதி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை ஒரு புள்ளியில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து சுமார் ஒரு மாதத்துக்கு பின்னர் சீசனின் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதுவும் உள்ளூர் மைதானத்தில் இந்த வெற்றி அமைந்திருப்பது சிறப்பான விஷயமாக அமைந்துள்ளது.

யுபி யோதாஸ் அணி தொடர்ச்சியாக 7 தோல்விகளை பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி