PKL 2024 Semi Finals: நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூரை வீட்டுக்கு அனுப்பிய ஹரியானா! மற்றொரு போட்டியில் தூள் கிளப்பிய புனேரி
Feb 29, 2024, 04:00 AM IST
நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்க்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஹரியான ஸ்டீலர்ஸ் வெற்றி பெற்றதோடு முதல் முறையாக ப்ரோ கபடி லீக் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ப்ரோ கபடி லீக் 2024 தொடர் அரையிறுதி போட்டிகள் ஹைதராபாத்திலுள்ள கச்சிபவுலியிலுள்ள ஜிஎம்சி பாலயோகி ஸ்போர்ட்ஸ் காம்பிளக்ஸில் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் புனேரி பல்தான் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
புனேரி வெற்றி
தொடர் முழுவதும் உச்சகட்ட பார்மில் இருந்து வந்த புனேரி பல்தான், முக்கியத்துவம் மிக்க இந்த போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதி ரெயிட், டேக்கிள் ஆகியவற்றில் அதிக புள்ளிகளை பெற்று முன்னிலை அடைந்தது. இரண்டாம் பாதியில் ரெயிடில் கோட்டை விட்டபோதிலும், டேக்கிளில் அதிக புள்ளிகளை பெற்று புனேரி அணி முன்னேறியது.
முழு ஆட்ட நேர முடிவில் 37-21 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் புனேரி பல்தான் அணி 19 ரெயிட், 13 டேக்கிள், 4 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் பெறவில்லை. பாட்னா பைரேட்ஸ் அணி 16 ரெயிட், 4 டேக்கிள், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஆல்அவுட் புள்ளிகளை பெறவில்லை. ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளியை பெற்றது.
புனேரி பல்தான் வீரர் அஸ்லாம் இனாம்தர் 5 ரெயிட், 2 போனஸ் என 7 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார். பாட்னா பைரேட்ல் வீரர் சச்சின் 4 ரெயிட், ஒரு போனஸ் என 5 புள்ளிகளை பெற்றுள்ளார்.
ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் போட்டி
ப்ரோ கபடி லீக் தொடர் இரண்டாவது அரையிறுதி போட்டி ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஹரியானாவும், இரண்டாம் பாதியில் ஜெய்ப்பூர் அணியும் முன்னிலை பெற்றன. முதல் பாதி ரெயிட், டேக்கிளில் ஹரியானாவும், இரண்டாம் பாதி ரெயிட், டேக்கிள் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியும் முன்னிலை வகித்தன.
முழு ஆட்டநேர முடிவில் 31-27 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பைனலில் நுழைந்தது ஹரியானா ஸ்டீலர்ஸ்.
ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 18 ரெயிட், 11 டேக்கிள், 2 ஆல்அவுட் புள்ளிகளை பெற்றது. எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெறவில்லை. அதேபோல் சூப்பர் ரெயிட் புள்ளிகளும் பெறவில்லை.
ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 19 ரெயிட், 6 டேக்கிள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஆல்அவுட், சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெறவில்லை.
ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வீரர் அர்ஜுன் தேஷ்வால் 9 ரெயிட், 5 போனஸ் என 14 புள்ளிகளுடன் டாப் வீரராக உள்ளார். ஹரியானா ஸ்டீலர்ஸ் வீரர் வினய் 11 ரெயிட் மட்டும் எடுத்து மொத்தம் 11 புள்ளிகளை பெற்றார்.
இறுதிப்போட்டி
ப்ரோ கபடி லீக் சீசன் 10 இறுதிப்போட்டியில் புனேரி பல்தான் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டி இன்று நடைபெற இருக்கிறது.
இந்த இரு அணிகளில் ஹரியானா முதல் முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. கடந்த முறை 7வது இடத்தில் இருந்த ஹரியானா இந்த சீசனில் விஸ்வரூபம் எடுத்து பைனல் வரை முன்னேறியுள்ளது.
புனேரி பல்தான் கடந்த சீசனில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்க்கு எதிராக தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் பைனலுக்கு நுழைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்