தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pkl 2024: எல்லாம் முடிஞ்சுபோச்சு! இனி அதிர்ஷ்டம் மட்டும் தான் பாக்கி - தமிழ் தலைவாஸை துவம்சம் செய்த புனேரி பல்தான்

PKL 2024: எல்லாம் முடிஞ்சுபோச்சு! இனி அதிர்ஷ்டம் மட்டும் தான் பாக்கி - தமிழ் தலைவாஸை துவம்சம் செய்த புனேரி பல்தான்

Feb 12, 2024, 04:00 AM IST

google News
கட்டாய வெற்றியை பெற்றாக வேண்டிய போட்டியில் தோல்வியை தழுவியிருக்கும் தமிழ் தலைவாஸ் ப்ளேஆஃப் வாய்ப்பை கடினமாக்கியுள்ளது. இனி இதர அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்த தமிழ் தலைவாஸ் ப்ளேஆஃப்புக்கு முன்னேற முடியும்.
கட்டாய வெற்றியை பெற்றாக வேண்டிய போட்டியில் தோல்வியை தழுவியிருக்கும் தமிழ் தலைவாஸ் ப்ளேஆஃப் வாய்ப்பை கடினமாக்கியுள்ளது. இனி இதர அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்த தமிழ் தலைவாஸ் ப்ளேஆஃப்புக்கு முன்னேற முடியும்.

கட்டாய வெற்றியை பெற்றாக வேண்டிய போட்டியில் தோல்வியை தழுவியிருக்கும் தமிழ் தலைவாஸ் ப்ளேஆஃப் வாய்ப்பை கடினமாக்கியுள்ளது. இனி இதர அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்த தமிழ் தலைவாஸ் ப்ளேஆஃப்புக்கு முன்னேற முடியும்.

ப்ரோ கபடி லீக் 2024 தொடர் கொல்கத்தாவிலுள்ள நேதாஜி இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் 115வது போட்டியில் தமிழ் தலைவாஸ் - புனேரி பல்தான் அணிகள் மோதின.

தமிழ் தலைவாஸ் அணி கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் புனேரி பல்தான் அணியை எதிர்கொண்டது. இதுவரை 2 தோல்விகளை மட்டும் சந்தித்திருக்கும் புனேரி பல்தான் இந்த தொடர் முழுவதும் எதிரணியை துவம்சம் செய்யும் விதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியது

தமிழ் தலைவாஸ் தோல்வி

இந்த ஆட்டத்தில் முதல் பாதி ரெயிட், டேக்கிளில் முன்னிலை பெற்ற புனேரி பல்தான், இரண்டாவது பாதி டேக்கிளில் மட்டும் அதிக புள்ளிகளை பெற்றது. ரெயிட் ஆட்டத்தில் இரு அணிகளும் சம புள்ளிகளை பெற்றன. முழு ஆட்ட நேர முடிவில் 56-29 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பல்தான் அணி தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் புனேரி பல்தான் அணி 23 ரெயிட், 24 டேக்கிள், 6 ஆல்அவுட், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் பெறவில்லை. தமிழ் தலைவாஸ் அணி அணி 15 ரெயிட், 10 டேக்கிள், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஆல்அவுட், சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெறவில்லை.

புனேரி பல்தான் வீரர் பங்கஜ் மொஹிதே 8 ரெயிட், 2 டேக்கிள், 2 போனஸ் என 12 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார். தமிழ் தலைவாஸ் வீரர் முகமதுரேசா கபௌத்ரஹங்கி 2 ரெயிட், 2 டேக்கிள், 2 போனஸ் என 8 புள்ளிகளை பெற்றார்.

இந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு மோதல்களிலும் புனேரி பல்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் பெற்ற தோல்வியால் தமிழ் தலைவாஸ் அணி ப்ளேஆஃப் வாய்ப்பு கடினமாகியுள்ளது. அத்துடன் புள்ளிப்பட்டியலும் ஒரு இடம் பின்னோக்கி சென்று 9வது இடத்தில் உள்ளது.

பெங்களுரு புல்ஸ் vs குஜராத் ஜெயிண்ட்ஸ்

ப்ரோ கபடி லீக் தொடர் 116வது போட்டி பெங்களுரு புல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஆட்டத்தின் இரண்டு பாதியையும் குஜராத் ஜெயிண்ட்ஸ் தன் வசமாக்கியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ரெயிட் ஆட்டத்தில் மட்டும் பெங்களுரு புல்ஸ் சிறப்பாக செயல்பட்டது. மற்றபடி முதல் பாதி ரெயிட், டேக்கிள், இரண்டாவது பாதி டேக்கிள் என குஜராத் ஜெயிண்ட்ஸ் முன்னேறியது.

முழு ஆட்ட நேர முடிவில் 50-28 என்ற புள்ளி கணக்கில் பெங்களுரு புல்ஸ் அணியை குஜராத் ஜெயிண்ட்ஸ் வீழ்த்தியது

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 20 ரெயிட், 15 டேக்கிள், 8 ஆல்அவுட், 7 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. அத்துடன் 2 சூப்பர் ரெயிட் புள்ளிகளையும் பெற்றது.

பெங்களுரு புல்ஸ் அணி 20 ரெயிட், 7 டேக்கிள், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஆல்அவுட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை. ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெற்றது.

குஜராத் ஜெயிண்ட் வீரர் ப்ரதீக் தாஹியா 12 ரெயிட், ஒரு போனஸ் என 13 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார். பெங்களுரு புல்ஸ் வீரர் ரக்‌ஷித் 6 ரெயிட் புள்ளிகளை மட்டும் பெற்று மொத்தம் 6 புள்ளிகளுடன் அந்த அணியின் டாப் வீரராக உள்ளார்.

இந்த இரு அணிகளுக்கும் இடையே நடந்த இரண்டு போட்டிகளிலும் குஜராத் ஜெயிண்டஸ் வெற்றி பெற்றுள்ளது.

கடைசி இரண்டு இடங்களுக்கு போட்டி

ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், புனேரி பல்தான் அணிகளை தொடர்ந்து தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில், எஞ்சிய இரண்டு இடங்களுக்கு பாட்னா பைரேட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களுரு புல்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி