PKL 2024: ப்ரோ கபடி லீக் ப்ளேஆஃப் குறித்த முக்கிய அறிவிப்பு..! அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி யார் தெரியுமா?
Feb 01, 2024, 05:27 PM IST
ப்ரோ கபடி லீக் 2024 தொடர் லீக் சுற்று போட்டிகள் முடிவதற்கு இன்னும் 3 வாரங்கள் மீதமிருக்கும் நிலையில், ப்ளே ஆஃப் வாய்ப்பை பெறுவதற்கு அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ப்ரோ கபடி லீக் தொடர் சீசன் 10 கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதுவரை 99 போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் 100வது போட்டி தபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
டெல்லியில் அமைந்திருக்கும் தியாகராஜ் இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டி நடப்பு சீசனில் டெல்லியில் நடைபெறும் முதல் போட்டியாக உள்ளது.
இதையடுத்து ப்ரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்று போட்டிகள் பிப்ரவரி 21ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்து 10 போட்டிகள் கொண்ட் ப்ளேஆஃப் சுற்று போட்டிகளை நடைபெற இருக்கின்றன.
ப்ரோ கபடி லீக் சீசன் 10 ப்ளே ஆஃப் போட்டிகள் ஹைதராபாத்திலுள்ள கச்சி பவுலி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 26 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை ப்ளேஆஃப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். மூன்று முதல் ஆறாவது இடத்தை பிடிக்கும் அணிகள் பிப்ரவரி 26ஆம் தேத நடைபெறும் எலமினேட்டர் போட்டியில் மோதும்.
புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்திருக்கும் அணி 6வது இடத்தை பிடித்த அணியுடனும், 4வது இடத்தை பிடித்த அணி, 5வது இடத்தை பிடித்த அணியுடனும் முறையே எலிமினேட்டர் 1, எலிமினேட்டர் 2 ஆகிய போட்டிகளில் மோதிக்கொள்ளும்.
இதில் எலிமினேட்டர் 1இல் வெற்றி பெறும் அணி, முதல் இடத்தை பிடித்த அணியுடனும், எலிமினேட்டர் 2இல் வெற்றி பெற்ற அணி இரண்டாவது இடத்தை பிடித்த அணியுடன் அரையிறுதி போட்டியில் மோதும்.
ப்ரோ கபடி லீக் சீசன் 10 இறுதிப்போட்டி மார்ச் 1ஆம் தேதி நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், தனது கடைசி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
மீதமுள்ள 5 இடங்களுக்கு மற்ற 11 அணிகளுக்கு மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்