தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pkl 2024: யுபி யோதாஸ் அணியை எளிதாக வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ்

PKL 2024: யுபி யோதாஸ் அணியை எளிதாக வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ்

Jan 13, 2024, 11:30 PM IST

google News
யுபி யோதாஸ் அணியை விட தொடர்ச்சியாக முன்னிலை பெற்று ஆட்டம் முழுதும் ஆதிக்கம் செலுத்திய பெங்கால் வாரியர்ஸ் சீசனின் 5வது வெற்றியை பெற்றது.
யுபி யோதாஸ் அணியை விட தொடர்ச்சியாக முன்னிலை பெற்று ஆட்டம் முழுதும் ஆதிக்கம் செலுத்திய பெங்கால் வாரியர்ஸ் சீசனின் 5வது வெற்றியை பெற்றது.

யுபி யோதாஸ் அணியை விட தொடர்ச்சியாக முன்னிலை பெற்று ஆட்டம் முழுதும் ஆதிக்கம் செலுத்திய பெங்கால் வாரியர்ஸ் சீசனின் 5வது வெற்றியை பெற்றது.

ப்ரோ கபடி லீக் 2024 தொடர் ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மாண்சிங் இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தொடரின் 70வது போட்டி யுபி யோதாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்த போட்டியில் முதல் பாதி முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தியது பெங்கால் வாரியர்ஸ். இரண்டாம் பாதியில் யுபி யோதால் அதிக புள்ளிகளை பெற்றபோதிலும், பெங்கால் வாரியர்ஸ் அணியை முந்த முடியவில்லை. முழு ஆட்ட நேர முடிவில் பெங்கால் வாரியர்ஸ் 42-37 என்ற புள்ளிகணக்கில் வெற்றியை பெற்றது. இது பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு சீசனின் 5வது வெற்றியாக அமைந்ததது.

இந்த சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்று தோல்வியே அடையாத அணியாக இருந்து வந்து புனேரி பல்தான் முதல் தோல்வியை அடைந்தது. 2 புள்ளிகள் வித்தியாசத்தில் புனேரி பல்தான் வெற்றியை கைவிட்டது.

இந்த போட்டியில் யுபி யோதாஸ் அணி 25 ரெயிட், 6 டேக்கிள், 4 ஆல்அவுட், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

அதே போல் பெங்கால் வாரியஸ் அணி 28 ரெயிட், 11 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெற்வில்லை.

யுபி யோதாஸ் கேப்டன் பிரதீப் நார்வல் 16 ரெயிட், டேக்கிள், போனஸ் புள்ளிகள் எதுவும் பெறாத நிலையில் மொத்தம் 16 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார்.

பெங்கால் வாரியர்ஸ் 12 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வ, 2 டிராவுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. யுபி யோதாஸ் 3 வெற்றி, 9 தோல்வி, ஒரு டிரா என 10வது இடத்தில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி