Jyothi Yarraji: இந்திய தடகள வீராங்கனை ஜோதி யர்ராஜிக்கு பாராசூட் அட்வான்ஸ்டு ஜாஸ்மின் ஆதரவு!
Aug 05, 2024, 07:55 PM IST
Jyothi Yarraji: யர்ராஜி தனது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஷைன் ஆகிறார், பாராசூட் அட்வான்ஸ்டு ஜாஸ்மின் ஒரு பிராண்டாக #ShineBejhijak (தயக்கமின்றி ஷைன் ஆகவும்) உடன் பரிந்துரைக்கப்பட்டது. அதனால்தான் பாராசூட் அட்வான்ஸ்டு ஜாஸ்மின் ஆயில் பிராண்ட் அவருடன் இணைந்துள்ளது.
Jyothi Yarraji, Parachute Advansed Jasmine: தடகள வீராங்கனை ஜோதி யர்ராஜியின் வாழ்க்கை வரலாறு மனித ஆற்றலுக்கு ஒரு உண்மையான சான்றாகும். இந்த இளம் பெண், உலகின் மாபெரும் விளையாட்டு திருவிழாவில் ஒரு நட்சத்திரமாக ஷைன் ஆக வாழ்வின் அடிமட்டத்திலிருந்து உயர்ந்துள்ளார். ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிறந்த 24 வயதான இவர், இந்தியா இதுவரை கண்டிராத சிறந்த தடை ஓட்டப் பந்தய வீராங்கனை. அவரது வாழ்க்கைப் பயணம் லட்சக்கணக்கான நபர்களுக்கு ஓர் உத்வேகம் - அவரது ஆரம்பகால வாழ்க்கை சவால்கள் நிறைந்தது, ஆனால் அவரது அசைக்க முடியாத உறுதி, அவரை தடகள வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றது.
யர்ராஜி தனது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஷைன் ஆகிறார், பாராசூட் அட்வான்ஸ்டு ஜாஸ்மின் ஒரு பிராண்டாக #ShineBejhijak (தயக்கமின்றி ஷைன் ஆகவும்) உடன் பரிந்துரைக்கப்பட்டது. அதனால்தான் பாராசூட் அட்வான்ஸ்டு ஜாஸ்மின் ஆயில் பிராண்ட் அவருடன் இணைந்துள்ளது.
ஆரம்பகால சவால்களை எதிர்கொள்ளுதல்
யர்ராஜி ஆகஸ்ட் 28, 1999 அன்று குறைந்த வசதியுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவரது முதல் முன்மாதிரி - அவரது தாயார் குமாரி - அவர் தனது ஆரம்பகாலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தார், வறுமையைப் போக்க வீட்டு உதவியாளராகவும், விசாகப்பட்டினத்தில் ஒரு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகவும் பணியாற்றினார். அவரது தந்தை சூர்யநாராயணா ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். அவருடைய பெற்றோர், யர்ராஜிக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை வழங்க விரும்பி,
விசாகப்பட்டின துறைமுக உயர்நிலைப் பள்ளி, கிருஷ்ணாவில் அவரைச் சேர்த்தனர். இங்குதான் அவரது உடற்கல்வி பயிற்சி ஆசிரியர் யர்ராஜியின் தடை ஓட்டப் பந்தய திறமையையும் திறனையும் உணர்ந்தார். முதல் முறை மாவட்டங்களுக்கு இடையேயான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு, அவர் ஜூனியர் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் தொடர்ந்து சிறந்து விளங்கினார், மேலும் ஒலிம்பியன் மற்றும் துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளர் என். ரமேஷின் கீழ் பயிற்சி பெற ஹைதராபாத் SAI மையத்திற்குச் சென்றார்.
துன்பத்திலும் ஷைன் ஆகிறார்
ஹைதராபாத் SAI மையத்தில் இரண்டு வருட கடுமையான பயிற்சிக்குப் பிறகு, குண்டூரில் இருக்கும் சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் நிறுவனத்தில் பட்டம் பெற்றது, யர்ராஜிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இருப்பினும், அந்த மையம் திடீரென
மூடப்பட்டது அவரது முதல் பெரிய பின்னடைவிற்கு வழிவகுத்தது. 2019 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹில்லியரிடம் பயிற்சி பெற, அவர் புவனேஸ்வரில் இருக்கும் ஒடிசா ரிலையன்ஸ் தடகள உயர் செயல்திறன் மையத்திற்கு சென்றார். அவரது வழிகாட்டுதலின் கீழ், அவர் ஜனவரி 2020 ஆம் ஆண்டு அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 13.03 வினாடிகளில் தங்கம் வென்றார்.
100 மீட்டர் ஓட்ட களத்தில் ஷைன் ஆகிறார்
தடகளத்தைத் தவிர, யர்ராஜி ஓவியம் வரைவதை விரும்புகிறார், அது அவரது கடுமையான பயிற்சிகளுக்கு இடையில் மனதை அமைதிப்படுத்த மற்றும் சமநிலைப்படுத்த உதவும் ஒரு பொழுதுபோக்காக இருக்கிறது. அவரது பன்முக ஆளுமை தன்மை , இந்தியா முழுவதும் உள்ள இளம் பெண்களுக்கு அவரை ஓர் உத்வேகம் அளிக்கும் பெண்மணியாக மாற்றுகிறது. இந்த படைப்பாற்றல் நாட்டம், தீவிர பயிற்சி மற்றும் போட்டிக்கு மத்தியிலும்கூட, மகிழ்ச்சியையும் அமைதியையும் கண்டறிவதற்கான அவரது திறனை எடுத்துக்காட்டுகிறது.
பாராசூட் அட்வான்ஸ்டு ஜாஸ்மின் உடன் அவரது இணைப்பு
யர்ராஜியின் உத்வேகமான வாழ்க்கை, பாராசூட் அட்வான்ஸ்டு ஜாஸ்மின் குறிப்பிடும் முக்கிய மதிப்புகளுடன் தடையின்றி இணைந்துள்ளது, அது பிராண்டிற்கு அவரை ஒரு கவர்ச்சியான முகமாக மாற்றுகிறது. பாராசூட் அட்வான்ஸ்டு ஜாஸ்மின் யர்ராஜியை ஏன் தேர்வு செய்தது என்பது பற்றி பேசும்போது, CMO சோமஸ்ரீ போஸ் அவஸ்தி, மேரிகோ இவ்வாறு தெரிவித்தார்:
“பாராசூட் அட்வான்ஸ்டு ஜாஸ்மின், மிகப்பெரிய விளையாட்டு அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகும் ஒரு தடகள வீராங்கனையின் இந்த லட்சியப் பயணத்தை அங்கீகரிக்க விரும்புகிறது. அவருடைய பயணத்தையும், அவருடைய பல பாத்திரங்களையும், அவதாரங்களையும் மற்றும் அவர் அவரது அனைத்து அவதாரங்களிலும் ஜொலிப்பதையும் நாம் கொண்டாடுகிறோம். இப்போது அவர் மிகப்பெரிய மேடையில் #ShineBejhijhak -க்கு தயாராக இருக்கிறார்.”
யர்ராஜி பல்வேறு சிகை அலங்காரங்களை முயற்சி செய்கிறார், அது அவரது நம்பிக்கை மற்றும் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. “இந்தியப் பெண்கள் அழகு மற்றும் கேசத்தைப் பற்றி ஒரே நேரத்தில் பேசுகிறார்கள். அவர்களின் கேசம் அழகாக இருக்கும்போது, அவர்கள் தன்னம்பிக்கை அடைகிறார்கள். அதுதான் #ShineBejhijhak-இன் தத்துவம், அதுதான் இந்த பிராண்டின் அடித்தளம்-). ஜோதியின் பயணம், இந்த பிராண்டின் முக்கிய மதிப்புகளை பிரதிபலிப்பதால் மற்றும் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான இளம் பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் பயணத்துடன் ஒத்திருப்பதால், ஜோதியுடன் கூட்டு சேர நாங்கள் விரும்புகிறோம்.
நாங்கள் அவரது கதையையும், அதிக செயல்திறன் கொண்ட ஒரு விளையாட்டு வீராங்கனையாக உருவாக்குவதற்குப் பின்னணியில் இருக்கும் கதையையும் படமாக்க விரும்புகிறோம். ஒவ்வொரு தடையிலும் அவர் தன்னம்பிக்கையுடன் ஷைன் ஆக முடிவு செய்ததால் மட்டுமே அவரது வெற்றி சாத்தியமானது - அது #ShineBejhijhak -க்கு பின்னணியில் இருக்கும் பிராண்ட்டின் தத்துவம் என்று அவஸ்தி கூறினார்.
எனவே, #BiggestSportingCarnival -இல் 100 மீட்டர் தடை ஓட்டப்பந்தய போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொள்ள தயாராகும்போது, நாம் ஒன்றிணைந்து அவரை உற்சாகப்படுத்துவோம். இந்த வீடியோவில் ஒரு கருத்தை இடுவதன் மூலம் போட்டி நாளுக்கு முன் நீங்கள் யர்ராஜிக்கு நல்ல அதிர்ஷ்ட வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம். வீடியோவை இங்கே பார்க்கவும்.. <https://www.instagram.com/reel/C9fGLN8Cp-Y/>
பொறுப்புத் துறப்பு:
பிராண்ட் சார்பாக HT பிராண்ட் ஸ்டுடியோவால் இந்த கட்டுரை தயாரிக்கப்பட்டது மற்றும் இந்துஸ்தான் டைம்ஸின் இதழியல் / எடிட்டோரியலுக்கு எந்த ஈடுபாடும் இல்லை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்