தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Champions Trophy: அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியா வந்தது பாக்., ஹாக்கி அணி!

Asian Champions Trophy: அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியா வந்தது பாக்., ஹாக்கி அணி!

Manigandan K T HT Tamil

Aug 01, 2023, 03:35 PM IST

google News
ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் போட்டிகள் 16 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகிறது. (PTI)
ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் போட்டிகள் 16 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகிறது.

ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் போட்டிகள் 16 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகிறது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தான் ஹாக்கி அணி அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியா வந்தது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வரும் ஆகஸ்ட் 3 முதல் 12ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான், தென் கொரியா என ஆறு அணிகள் பங்கேற்கின்றன.

ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் போட்டிகள் 16 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வந்திருக்கிறது.

இது குறித்து பாகிஸ்தான் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் முகமது சக்லைன் கூறுகையில், ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக எங்கள் அணி சென்னை வருகிறது. விளையாட்டின் மூலம், எங்கள் உறவை வலுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம் என்றார்.

அட்டாரி-வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் அணியினர் இந்தியா வந்தனர்.

ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி என்பது ஆசிய ஹாக்கி சம்மேளனத்தால் (2011 முதல்) ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு போட்டியாகும். அந்த ஹாக்கி சீசனில் ஆசியாவின் டாப் 6 ஃபீல்டு ஹாக்கி அணிகள் ரவுண்ட் ராபின் முறையில் போட்டியிடுகின்றன.

இத்தொடரின் வரலாற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிகவும் வெற்றிகரமான அணிகளாக உள்ளன. இரு அணிகளும் 2018 ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டன.

இதுகுறித்து பாகிஸ்தான் ஹாக்கி அணியின் கேப்டன் முகமது உமர் பூட்டா கூறுகையில், ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

விளையாட்டு ஒரு நல்ல விஷயம், இது மற்றவர்களுடனான உங்கள் உறவை நல்லபடியாக உருவாக்க உதவுகிறது. நிறைய விளையாட்டு போட்டிகள் இதுபோன்ற நடத்தப்பட வேண்டும் என்றார்.

பாகிஸ்தான் 3 முறை கோப்பையை வென்றுள்ளது. 2012ல் முதல் பட்டத்தையும், 2013ல் இரண்டாவது பட்டத்தையும் வென்று, 2018ல் இந்தியாவுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது.

2011-ம் ஆண்டு இந்தியா வென்றது. 2016-ம் ஆண்டும், 2018-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது.

2021 இல் தென் கொரியா கோப்பையை வென்றது.

இந்த ஹாக்கி போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. டிக்கெட் விலையானது ரூ. 300, ரூ. 400 என விற்கப்படுகிறது. ஹாக்கி போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை https://in.ticketgenie.in  என்ற இணையதளத்தில் வாங்கி கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி