தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Htsports Special: குறை பிரசவத்தில் பிறந்து நிறைவான சாதனைகள் படைத்த வீரர்! ஓபனிங் பேட்ஸ்மேன் பவுலர் ஆன கதை

HTSports Special: குறை பிரசவத்தில் பிறந்து நிறைவான சாதனைகள் படைத்த வீரர்! ஓபனிங் பேட்ஸ்மேன் பவுலர் ஆன கதை

Jun 24, 2023, 06:10 AM IST

google News
இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடிய வீரர்களில் ஒருவர், இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்தவர், டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்த வீரர் என பல்வேறு சிறப்புகளுக்கும், சாதனைகளுக்கும் சொந்தகாரர் ஆக இருப்பவர் ஸ்டூவர்ட் பிராட்.
இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடிய வீரர்களில் ஒருவர், இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்தவர், டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்த வீரர் என பல்வேறு சிறப்புகளுக்கும், சாதனைகளுக்கும் சொந்தகாரர் ஆக இருப்பவர் ஸ்டூவர்ட் பிராட்.

இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடிய வீரர்களில் ஒருவர், இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்தவர், டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்த வீரர் என பல்வேறு சிறப்புகளுக்கும், சாதனைகளுக்கும் சொந்தகாரர் ஆக இருப்பவர் ஸ்டூவர்ட் பிராட்.

இந்த நூற்றாண்டில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய வீரர்களில் முக்கியமானவராகவும், பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய வீரராக இருந்து வருபவர் ஸ்டூவர்ட் பிராட். இங்கிலாந்து அணியின் முன்னாள் ஓபனிங் பேட்ஸ்மேன், பின்னாளில் அம்பயர் செயல்பட்ட கிறஸ் பிராட்டின் மகன்தான் ஸ்டூவர்ட் பிராட்.

குறை பிரசவத்தில் பிறந்த ஸ்டூவர்ட் பிராட், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர். சிறுவயதில் இருந்த 9 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் பிராட், ஆரம்பத்தில் தந்தையை போல் ஓபனிங் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். பின்னர் 17 வயது இருக்கும்போது தான் தன்னை ஒரு வேகப்பந்து வீச்சாளராக கருதி அதற்கேற்பு தயார்படுத்தி கொண்டார்.

கிளப் அணிகளில் சிறப்பாக செயல்பட்டு தேர்வு குழுவின் கவனத்தை ஈர்த்த பிராட், 2005இல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்பை பெற்று அதில் அசத்தினார். 2006இல் இங்கிலாந்தின் ஒரு நாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பிடித்து தனது பார்மை தொடர்ந்தார். இதனால் 2007இல் பிராடுக்கு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.

இளம் வீரராக இருந்த பிராட் அறிமுகமான அதே ஆண்டிலேயே அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையும் ஏற்பட்டது. இதை செய்தவர் இந்தியாவின் யுவராஜ் சிங். முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து உலகறிய செய்தார்.

இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான பிராட், இங்கிலாந்து அணியில் விளையாடும் வாய்ப்பையும் இழந்தார். பிறப்புக்கு பின்னர் இந்த உலகில் உயிர் வாழ போராட்டத்தை நிகழ்த்தி மீண்டு எழுந்த அவர், தனது திறமை நிருபித்து மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.

இந்த முறை விஸ்வரூபம் எடுத்து உலக கிரிக்கெட் அணிகளை தனது அட்டகாசமான பவுலிங்கால் மிரட்டினார். 2010இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 169 ரன்கள் குவித்து தனது பேட்டிங் திறமையும் வெளிப்படுத்தினார். இது டெஸ்ட் போட்டியில் 9வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய வீரர் அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.

இதன் பின்னர் 2011இல் இங்கிலாந்து அணி இந்தியாவை ஒயிட் வாஷ் செய்த தொடரில், 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது அவருக்கு முக்கியமான தொடராக அமைந்தது. இந்த தொடரில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் ஹாட்ரிக் விக்கெட்டும் எடுத்தார்.

உலக கிரிக்கெட்டில் அதிகம் பேர் பார்த்து ரசிக்கும் கிரிக்கெட் மோதலாக இருந்து வரும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடரில் ஹீரோவாகவே இவர் ஜொலித்துள்ளார். 2015 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெறும் 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த போட்டியில் ஆஸ்திரேலியா 60 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அந்த தசாப்தத்தின் சிறந்த பவுலிங்காக பிராட் வீசிய அந்த ஸ்பெல் அமைந்தது.

ஆஷஸ் தொடரில் மட்டும் பிராட் 145 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமைக்குரியவராக உள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரராக இருந்து வரும் பிராட், டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 7வது பவுலராகவும், 4வது வேகப்பந்து வீச்சாளராகவும், இரண்டாவது இங்கிலாந்து வீரராகவும் உள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 150க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் பிராட். டெஸ்ட் கிரிக்கெட்டை போல் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் முத்திரை பதித்துள்ளார் பிராட். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் 177 போட்டிகளில் விளையாடி இருக்கும் பிராட், 243 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் ஒரு நாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

இந்திய பேட்ஸ்மேன்களின் பேவரிட் பவுலர், இவருக்கு இந்தியா பேவரிட் அணி என்று கூறும் அளவுக்கு சாதனைகளின் புள்ளிவிவரங்களை நோக்கினால் தெரியும். இந்தியாவுக்கு எதிராகத்தான் யுவராஜ் சிங் அடித்த 6 சிக்ஸர்களால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். பின்னர் கம்பேக் கொடுத்த பிராட், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகள் வீழ்த்தி தன்னை விமர்சித்த உலகத்தை திரும்பி பார்க்க வைத்ததுடன், இங்கிலாந்து அணியில் நிலையான இடத்தையும் பிடித்தார்.

இந்தியாவை துவம்சம் செய்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இந்திய பவுலர் பும்ரா, பிராட்டின் ஒரே ஓவரில் 35 ரன்கள் விளாசினார். அந்த வகையில் இந்தியா, பிராட் இடையிலான கொடுக்கல் வாங்கல் என்பது மாறி மாறி நிகழ்ந்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்று முடிந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா பேட்ஸ்மேனை மிரிட்டி வருவதுடன், ஆஷஸ் தொடரில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் பிராட் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி