தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special: டெஸ்ட் கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை - எளிதில் எட்ட முடியாத மைல்கல்லை உருவாக்கி சென்ற சுழல் ஜாம்பவான்

HT Sports Special: டெஸ்ட் கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை - எளிதில் எட்ட முடியாத மைல்கல்லை உருவாக்கி சென்ற சுழல் ஜாம்பவான்

Jul 22, 2023, 06:20 AM IST

google News
ஓய்வு முடிவை அறிவித்த முரளிதரனுக்கு இன்னும் 8 விக்கெட் வீழ்த்தினால் புதிய மைல்கல் சாதனை புரியலாம் என்ற நிலை இருந்தது. அதை தனது கடைசி போட்டியில் வெற்றிகரமாக செய்து முடித்து அணிக்கு வெற்றியை தேடித்தந்து வெற்றிகரமான பவுலராக விடை பெற்றார் முத்தையா முரளிதரன்.
ஓய்வு முடிவை அறிவித்த முரளிதரனுக்கு இன்னும் 8 விக்கெட் வீழ்த்தினால் புதிய மைல்கல் சாதனை புரியலாம் என்ற நிலை இருந்தது. அதை தனது கடைசி போட்டியில் வெற்றிகரமாக செய்து முடித்து அணிக்கு வெற்றியை தேடித்தந்து வெற்றிகரமான பவுலராக விடை பெற்றார் முத்தையா முரளிதரன்.

ஓய்வு முடிவை அறிவித்த முரளிதரனுக்கு இன்னும் 8 விக்கெட் வீழ்த்தினால் புதிய மைல்கல் சாதனை புரியலாம் என்ற நிலை இருந்தது. அதை தனது கடைசி போட்டியில் வெற்றிகரமாக செய்து முடித்து அணிக்கு வெற்றியை தேடித்தந்து வெற்றிகரமான பவுலராக விடை பெற்றார் முத்தையா முரளிதரன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் ஸ்பின்னராக திகழும் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், எந்த பவுலரும் அவ்வளவு எளிதாக எட்ட முடியாத அளவிலான 800 விக்கெட் என்ற மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடியுள்ள முரளிதரன், 1347 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி்யுள்ளார். இந்த விக்கெட்டுகளை இனி அடைவது என்பது எந்த பவுலராலும் அவ்வளவு எளிதில் நினைத்துகூட பார்க்க முடியாத விஷயமாகும். அந்த வகையில் முரளிதரனின் இந்த சாதனை நீண்ட நாள் நிலைத்து நிற்கும் என நம்பலாம்.

குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பவுலராக இருந்து வருகிறார் முத்தையா முரளிதரன். இந்த 800வது விக்கெட்டை அவர் எடுத்ததற்கு பின்னணியில் சுவாரஸ்யங்களும் நிறைந்துள்ளன.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த இந்தியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் காலேவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற போவதாக அறிவித்தார் முரளிதரன். அப்போது அவர் 792 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். கைவசம் 8 விக்கெட்டுகள் தேவை, 800 என்ற மைல்கல்லை எட்டிப்பிடிக்க.

இந்த சூழ்நிலையில் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை பேட்டிங் செய்ய, இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது. இதையடுத்து மூன்றாவது நாளில் இந்தியா பேட்டிங் செய்தது. வழக்கம்போல் தனது சுழல் ஜாலங்களை நிகழ்த்திய முரளிதரன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி பாலோ ஆன் கூட செய்யாமல் இந்தியா ஆல்அவுட்டானது. இதனால் மீண்டும் பேட்டிங் செய்ய இந்தியாவை அழைத்தது இலங்கை அணி. அதாவது முரளிதரனுக்காகவே அழைத்தது என்றே கூறலாம்.

இதில் முக்கியமாக மூன்றாவது நாள் ஆட்டத்தில் சச்சின் டென்டுல்கர் விக்கெட்டை மட்டும் வீழ்த்திய முரளிதரன், 793 என தனது மொத்த விக்கெட் ல்ஸிடில் ஒரு விக்கெட் உயர்ந்தார். இதைத்தொடர்ந்து நான்காவது நாள் முரளிதரனுக்காக அமைந்த நாளாக இருந்தது. இந்த நாளில் மட்டும் இந்தியாவுக்கு 12 விக்கெட்டுகள் காலியாகின. இதில் 5 விக்கெட்டுகளை முரளிதரன் எடுத்தார்.

798 விக்கெட்டுகளை எடுத்த முரளிதரன் இன்னும் இரண்டு விக்கெட் தேவை என்ற நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் களமிறங்கினார். ஆரம்பத்திலேயே டெயில் பேட்ஸ்மேனான ஹர்பஜன் விக்கெட்டை தூக்கினார் முரளி. தோல்வியை தவிர்க்க போராடி வந்த லக்‌ஷமன் ரன் அவுட்டானார்.

இதனால் ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருக்க முரளி சாதனை நிகழ்த்துவாரா என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த சூழ்நிலையில் 10வது விக்கெட்டுக்காக இஷாந்த ஷர்மா - பிரக்யஞன் ஓஜா ஆகியோர் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து 24 ரன்கள் சேர்த்தனர். எதிர்பார்த்து போலவே ஓஜா விக்கெட்டை தூக்கினார் முரளி. ஸ்லிப்பில் இருந்த ஜெயவர்த்தனேவிடம் சிக்கினார். அவ்வளவுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் அவ்வளவு எளிதில் செய்ய முடியாத 800 விக்கெட் என்ற மைல்கல் சாதனையை தனது கடைசி டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தினார் முரளிதரன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 77வது முறை கேட்ச் ஜெயவர்தனே, பவுலிங் முரளிதரன் என்கிற மற்றொரு சாதனையும் நிகழ்ந்தது. இதன் பின்னர் சக வீரர்கள் அனைவரும் முரளிதரனை பெவிலியன் வரை அலேக்காக தூக்கி சென்று கொண்டாடினர். கிரிக்கெட் உலகில் சில சம்பவங்கள் திரைக்கதை எழுதியது போல் அமையும். அப்படியான ஒரு சம்பவம் முரளிதரனுக்கு கடைசி டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்தது.

நியூசிலாந்தின் ரிச்சார்டு ஹார்ட்லீ டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கடைசி பந்தில் விக்கெட்டுடன் விடைபெற்றார். அதைபோலவே முரளிதரனும் தனது கிரிக்கெட்டை வாழ்விலிருந்து மறக்க முடியாத விக்கெட்டுடன் சரியாக 13 ஆண்டுகள் முன்பு இதே நாளில்தான் விடை பெற்றார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி