தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special: தென் ஆப்பரிக்கா பவுலர்களை வாட்டி வதைத்த சங்ககாரா - ஜெயவர்த்தனே! டெஸ்ட் கிரிக்கெட் பெரிய பார்ட்னர்ஷிப்

HT Sports Special: தென் ஆப்பரிக்கா பவுலர்களை வாட்டி வதைத்த சங்ககாரா - ஜெயவர்த்தனே! டெஸ்ட் கிரிக்கெட் பெரிய பார்ட்னர்ஷிப்

Jul 29, 2023, 05:45 AM IST

google News
ஆசிய துணை கண்ட ஆடுகளங்களின் மீது எப்போதும் வைக்கப்படும் குற்றச்சாட்டாக இருப்பது வேகப்பந்துக்கு சாதமாக இருக்காது, கரடுமுரடான பிட்ச்களை ஸ்பின்னர்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும், இவை இரண்டும் இல்லாவிட்டால் மிகவும் தட்டையாக பேட்ஸ்மேன்கள் ரன்குவிப்பு பல்வேறு சாதனைகள் செய்ய உதவும் என்பதுதான்.
ஆசிய துணை கண்ட ஆடுகளங்களின் மீது எப்போதும் வைக்கப்படும் குற்றச்சாட்டாக இருப்பது வேகப்பந்துக்கு சாதமாக இருக்காது, கரடுமுரடான பிட்ச்களை ஸ்பின்னர்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும், இவை இரண்டும் இல்லாவிட்டால் மிகவும் தட்டையாக பேட்ஸ்மேன்கள் ரன்குவிப்பு பல்வேறு சாதனைகள் செய்ய உதவும் என்பதுதான்.

ஆசிய துணை கண்ட ஆடுகளங்களின் மீது எப்போதும் வைக்கப்படும் குற்றச்சாட்டாக இருப்பது வேகப்பந்துக்கு சாதமாக இருக்காது, கரடுமுரடான பிட்ச்களை ஸ்பின்னர்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும், இவை இரண்டும் இல்லாவிட்டால் மிகவும் தட்டையாக பேட்ஸ்மேன்கள் ரன்குவிப்பு பல்வேறு சாதனைகள் செய்ய உதவும் என்பதுதான்.

இந்தியா தவிர ஆசிய துணை கண்டங்களான இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளில் உள்ள ஆடுகளங்கள் எப்போதும் ஸ்பின் பந்து வீச்சுக்கு சாதகமானவையாகவே இருந்துள்ளன. அதை விட்டால் பேட்ஸ்மேன்கள் முழு ஆதிக்கம் செலுத்தி சாதனைகளை புரியும் தட்டையான பிட்ச்காக இருக்கும். ஒருபோதும் வேகப்பந்து வீச்சுக்கு பெரிதாக உதவியதில்லை.

இந்த சூழ்நிலையில், ஆசிய அணிகள் தவிர வேகப்பந்து வீச்சாளர்கள் பிரதானமாக கொண்ட மற்ற அணிகள் ஆசிய துணை கண்டத்தில் விளையாட வரும்போது பவுலிங்கில் எந்த விதத்தில் சாதிக்காமல் போவதுடன், மிகவும் மோசமான பந்து வீச்சையும் வெளிப்படுத்தும் நிலைமையே வரலாற்றில் அதிகம் நிகழ்ந்துள்ளது.

அந்த வகையில் 2006இல் இலங்கை சுற்றுப்பயணம் செய்த தென்ஆப்பரிக்கா அணி விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் மிகவும் மோசமான தோல்வியை தழுவியதோடு, பவுலிங்கிலும் உதவாக்கரை போல் செயல்பட்டது. இந்த ஆட்டத்தில் இலங்கை பேட்ஸ்மேன்களான குமார சங்ககாரா - மஹேலா ஜெயவர்த்தனே இணைந்து டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நிகழ்த்திய சாதனை இதுவரை முறியடிக்கப்படாமலேயே உள்ளது.

கொழும்புவில் ஜூலை 27 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் மூன்றாவது நாளில் குமார சங்ககாரா - மஹேலா ஜெயவர்த்தனே ஜோடி இணைந்து 624 ரன்கள் என வரலாற்று சிறப்பு மிக்க சாதனை புரிந்தனர். டெஸ்ட் போட்டியில் எந்த பேட்டிங் வரிசையிலும் குவிக்கப்பட்ட அதிகமான பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்தது.

அத்துடன் இதற்கு முன்னர் அதிக டெஸ்ட்  பார்ட்னர்ஷிப்பாக, இந்தியாவுக்கு எதிராக இலங்கை பேட்ஸ்மேன்கள் சனத் ஜெய்சூர்யா - ரோஷன் மகானமா ஆகியோர் இணைந்து அடித்த 576 ரன்கள் இருந்தது. அதை இந்த ஜோடி முறியடித்தனர்.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளைக்கு பிறகு பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணி 14 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது. அப்போது பேட்டி செய்ய வந்த இந்த ஜோடி, இரண்டாம் நாள் முழுமையாக பேட் செய்து மூன்றாம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னரே பிரிந்தனர். கிட்டத்தட்ட மூன்று நாள்கள் வரை களத்தில் பேட் செய்து தென்ஆப்பரிக்கா பவுலர்களை வாட்டி வதைத்தனர்.

இந்த மிகப் பெரிய பார்ட்னர்ஷிப்பை பிரித்த பெருமை தென்ஆப்பரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ ஹால் பெற்றார். 457 பந்துகளில் 287 ரன்கள் எடுத்த சங்ககார விக்கெட்டை அவர்தான் வீழ்த்தினார். 675 நிமிடங்கள் இவர் களத்தில் பேட் செய்துள்ளார்.

அப்போது 300+ ரன்களுடன் இருந்த ஜெயவர்த்தனே, தொடர்ந்து பேட் செய்து 572 பந்துகளில் 374 ரன்கள் எடுத்து ஆண்ட்ரூ நெல் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். பேட்ஸ்மேன்களுக்கு நன்கு சாதகமாக அமைந்த இந்த பிட்சில் பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு சாதித்தார் இலங்கை ஸ்பின் ஜாம்பவனான முத்தையா முரளிதரன்.

முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாவது இன்னிங்ஸில் 6 என மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்கள் பவுலிங்கில் மிரட்டினார் முரளிதரன்.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பரிக்கா, முதல் இன்னிங்ஸில் 169 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 756 ரன்கள் என இமாலய ஸ்கோர் எடுத்ததுடன் 587 ரன்கள் முன்னிலை பெற்றது.

இலங்கை அணியின் 5 விக்கெட்டுகளை வீழ்த்த 8 பவுலர்கள் தென் ஆப்பரிக்கா அணி பயண்படுத்தியது. அத்துடன் 185.1 ஓவர்கள் பவுலிங் செய்தது.

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த தென் ஆப்பரிக்கா கொஞ்சம் மீண்டெழுந்து 434 ரன்களில் ஆல்அவுட்டானது. இருந்தபோதிலும் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 153 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

குமார சங்ககாரா - மஹேலா ஜெயவர்த்தனேவின் வரலாற்று சிறப்பு மிக்க பார்ட்னர்ஷிப் ஜூலை 29ஆம் தேதியான இதே நாளில் தான் நிகழ்த்தப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளை கூட டி20 போல் அதிரடியாகவும், வேகமாக அணிகள் ஆட வரும் நிலையில் இதுபோன்ற மிகப் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்குமா என்பதை நினைத்துகூட பார்க்க முடியாது.

ஆனால் சாதனைகள் என்பது முறியடிக்க தான் என்பதுபோல், டெஸ்ட் விளையாட்டில் அடிநாதமாக திகழும் விவேகம், பொறுமை, நிதானம் போன்றவை பேட்ஸ்மேன்களுக்கும், பவுலர்களுக்கு வர வேண்டும் என்பதை நினைவுக்கூறும் விதமாக இந்த பார்னர்ஷிப் சம்பவம் அமைந்துள்ளது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி