தமிழ் செய்திகள்  /  Sports  /  Olympic Gold Medalist Neeraj Chopra Names His Three Favorite Women's Premier League Stars

WPL போட்டியில் நீரஜ் சோப்ராவின் 3 ஃபேவரைட் பிளேயர்ஸ்!

Manigandan K T HT Tamil

Mar 26, 2023, 05:21 PM IST

Neeraj Chopra: ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது ஃபேவரைட் வீராங்கனைகளின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார். (Women's Premier League (WPL) Twi)
Neeraj Chopra: ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது ஃபேவரைட் வீராங்கனைகளின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார்.

Neeraj Chopra: ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது ஃபேவரைட் வீராங்கனைகளின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மகளிர் ப்ரீமியர் லீக்கில் தனக்கு பிடித்த மூன்று வீராங்கனைகளின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

Olympic 2024: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட 5 பிளேயர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

April Sports Rewind: செஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த குகேஷ், அனல் பறந்த ஐபிஎல்.. ஸ்போர்ட்ஸில் முக்கிய நிகழ்வுகள்

Archer Deepika Kumari: வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக்கிற்கான TOPS திட்டத்தில் மீண்டும் சேர்ப்பு

மகளிர் ப்ரீமியர் லீக் (WPL) போட்டி முதல் முறையாக நமது நாட்டில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இளம் பெண்கள் கிரிக்கெட்டை தங்கள் கெரியராக எடுத்துக் கொள்ள டபிள்யூபிஎல் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த மகளிர் ப்ரீமியர் லீக் நிச்சமாக உந்து சக்தியாக இருக்கும் என நம்பலாம்.

மொத்தம் 5 அணிகள் உருவாக்கப்பட்டன. மும்பை இந்தியன்ஸ், யு.பி. வாரியர்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் களத்தில் இறங்கின.

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா, யு.பி. வாரியர்ஸ் கேப்டனாக அலிசா ஹீலி, டெல்லி கேப்டனாக மெக் லான்னிங், குஜராத் கேப்டனாக ஸ்னே ராணா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இன்றிரவு பைனலில் மும்பை இந்தியன்ஸும், டெல்லி கேபிட்டல்ஸும் மோதுகின்றன. இந்நிலையில், ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது ஃபேவரைட் வீராங்கனைகளின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மகளிர் ப்ரீமியர் லீக் டுவிட்டர் பேஜில் வெளியிடப்பட்ட வீடியோவில் அவர் கூறியதாவது:

எனது ஃபேவரைட் பிளேயர்ஸ் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா. இவர்களின் ஆட்டம் சிறப்பானதாக இருக்கிறது.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியின்மோதுதான் இந்திய மகளிர் அணி வீராங்கனைகளை நான் முதலில் பார்த்தேன்.

நான் அப்போது பயிற்சிக்காக தென் ஆப்பிரிக்காவில் இருந்தேன். இந்தியா பட்டம் வென்றதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். மகளிர் கிரிக்கெட்டை ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர். இதுவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் நீரஜ் சோப்ரா.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்மன்ப்ரீத் கவுர் 8 ஆட்டங்களில் விளையாடி 244 ரன்களை முதல் சீசனில் இதுவரை குவித்துள்ளார்.

ஓர் ஆட்டத்தில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 65 நாட்அவுட்.

டெல்லி அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கி அசத்திவரும் ஷஃபாலி வர்மா, 8 ஆட்டங்களில் 241 ரன்களை குவித்துள்ளார். இதுவரை 2 அரை சதங்களை WPL ல் பதிவு செய்துள்ளார் ஷஃபாலி.

பெங்களூர் அணியின் கேப்டனான ஸ்மிருதி மந்தனா, 8 ஆட்டங்களில் விளையாடி 149 ரன்களை மட்டுமே பதிவு செய்தார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 37.

முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே இன்று பார்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா கேப்டன் vs அயல்நாட்டு கேப்டன் மோதும் இந்தப் போட்டியில் மகுடம் சூடப்போவது யார் என்பது இன்று இரவு தெரிய வரும்.

டாபிக்ஸ்