தமிழ் செய்திகள்  /  Sports  /  Wpl 2023: Delhi Capitals And Mumbai Indians To Fight For First Ipl Trophy Today

WPL 2023: முதல் மகளிர் ஐபிஎல் கோப்பை யாருக்கு? டெல்லி - மும்பை மோதல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 26, 2023 08:21 AM IST

முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே இன்று பார்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா கேப்டன் vs அயல்நாட்டு கேப்டன் மோதும் இந்தப் போட்டியில் மகுடம் சூடப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.

மகளிர் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் மெக் லேனிங் - மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர்
மகளிர் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் மெக் லேனிங் - மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் இரண்டாவது இடத்துக்கு சென்ற மும்பை இந்தியன்ஸ் எலிமினேட்டர் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது.

இதையடுத்து மகளிர் ஐபிஎல் தொடரில் வலிமையான அணிகளாக இருந்து வரும் டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டி பார்போர்ன் மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

மும்பை அணியின் முக்கிய வீராங்கனைகளான நாட் ஸ்கிவர்-பிரண்ட் ஹேலி மேத்யூஸ், ஹர்மன்ப்ரீத் கெளர், யஸ்திகா பாட்யா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளார்கள்.

அதேபோல் டெல்லி அணியிலும் மெக் லேனிங், ஷெபாலி வர்மா, அலிஸ் கேப்சி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் கேப் ஆகிய மும்பை பெளலர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கு இடையிலான பேட்டிங் பவரை பிரதிபலித்து கோப்பையை கைப்பற்றும் என நம்பலாம்.

பிட்ச் நிலவரம் எப்படி?

இந்த சீசனில் பார்போர்ன் மைதானத்தில் 10 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட் செய்த அணியின் சராசரி ஸ்கோர் 138 என உள்ளது. அத்துடன் பேட்டர்களின் சொர்க்கபுரியாகவும் இருந்துள்ளது. முதலில் பேட் செய்த அணி 4 போட்டிகளிலும், சேஸிங் செய்த அணி 6 போட்டிகளிலுந் வெற்றிகளை குவித்துள்ளது. ஆடுகளம் ஸ்பின் பெளலர்களை விட சற்று வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்திருந்தாலும், கடந்த சில போட்டிகளில் சேஸிங் செய்த அணியே சாதித்துள்ளது.

மழை வாய்ப்பு?

மும்பையில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகரி வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பனிபொலிவும் குறைந்து விட்டதால் பந்து வீச்சாளர்கள் ஒளி விளக்குகளுக்கு மத்தியில் பந்து வீசுவதில் எந்த சிரமமும் இருக்காது.

WhatsApp channel

டாபிக்ஸ்